மணல் குவாரி ஆறுமுகசாமியின் வீடு, அலுவலகங்களில் அதிரடி வருமான வரி ரெய்ட்
சென்னை:
தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகளை ஏலத்தில் எடுத்திருக்கும் கோவையைச்சேர்ந்த பிரபல மணல் அதிபர் ஆறுமுகச்சாமியின் கோவை, கரூர் வீடுகள்,கிட்டங்கிகள்,அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மணல் குவாரிகளை தமிழக அரசு கையகப்படுத்திஅரசுடமையாக்கியுள்ளது.ஆனால், மணலை அள்ளி லாரிகளில் ஏற்றும் குத்தகையை கோவையைச் சேர்ந்தஆறுமுகச்சாமி என்ற மணல் குவாரி அதிபருக்கு ஒட்டுமொத்த காண்ட்ராக்ட்டைதமிழக அரசு வழங்கியுள்ளது.
முன்பு மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்தவர் இப்போது அவைஅரசுடமையாகிவிட்டதால், லாரிகளில் மணலை ஏற்றும் குத்தகையை ஒட்டுமொத்தமாக எடுத்துள்ளார்.
எந்த ஆட்சி இருந்தாலும் மணல் குத்தகையை இவர் எடுத்துவிடுவார். அந்த அளவுக்குசக்தி வாய்ந்தவராக உள்ளார். இப்போது மன்னார்குடி வகையறாவுக்கும் மிகநெருக்கமாக உள்ளார்.
இவருக்கே ஒட்டுமொத்தமாக மணலை அள்ளி லாரியில் ஏற்றும் குத்தகைதரப்பட்டதை எதிர்த்து பல்வேறு தனியார் மணல் குவாரி அதிபர்கள்உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில்உள்ளது.
இந் நிலையில், ஆறுமுகச்சாமியின் வீடு, அலுவலகங்கள், மணல் கிட்டங்கிகளில்இன்று காலை 9 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆறுமுகச்சாமியின் மிகப் பிரமாண்டமானஅரண்மனை போன்ற வீடு உள்ளது. அந்த வீட்டில் இன்று காலை 9 மணிக்குப் புகுந்தவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
இதேபோலகோவையில் உள்ள அவரது மணல் கிட்டங்கிகள்,
கரூரில் உள்ள மணல் கிட்டங்கிகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில்சோதனை நடந்தது.
இன்று இரவு வரை வருமான வரி சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது. இச்சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள், தஸ்தாவேஜுகள் சிக்கியுள்ளதாககூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர்களால்நடத்தப்பட்டு வருவதாக திமுகவால் குற்றம் சாட்டப்பட்ட மிடாஸ் மதுபானத்தொழிற்சாலையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த வருமான வரி ரெய்ட் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு இங்கிருந்துதான் மதுபானம்சப்ளை ஆகிறது குறிப்பிடத்ததக்கது.
இந் நிலையில், தமிழகம் முழுவதும் மணல் அள்ளி லாரிகளில் ஏற்றும் குத்தகையைஏகபோகமாக எடுத்திருக்கும் ஆறுமுகச்சாமியின் வீடு, கிட்டங்கிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் குறி வைத்திருப்பது இன்னொரு பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications