திருக்குறுங்குடி: மீண்டும் சிவன் சிலை-உத்தரவு
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி சிவன் கோவிலில் அகற்றப்பட்ட சிவன்சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று நாங்குநேரி நீதிமன்றம் அதிரடித்தீர்ப்பு அளித்துள்ளது.
திருக்குறுங்குடியில் உள்ள சுந்தரபரிபூரண வடிவழகிய நம்பெருமாள் கோவில்உள்ளது. மிகவும் பழமையான வைணவத் திருத்தலத்தில் சிவன் சன்னிதியும் இருந்தது.வைணவ-சைவ ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இருந்த அந்த ஆலயத்தில்புகுந்தார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.
கோவிலல் இருந்த சிவன் சிலையை, அகற்ற உத்தரவிட்டார். இதன் பின்னணியில்போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கேரள ஜோதிடர் உன்னியின் கைவண்ணமும்இருப்பதாகப் பேசப்பட்டது.
அப்போது ஜெயேந்திரரும் போயசுக்கு நெருக்கமாக இருந்த காலம் அது.ஜெயேந்திரரின் உத்தரவுப்படி கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி சிவன்சிலை அகற்றப்பட்டது. சன்னதியும் இடித்துத் தள்ளப்பட்டது.
பக்தர்கள் மத்தியில் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து திருக்குறுங்குடி வைச பிள்ளைமார் பேரவைத் தலைவர்சொக்கலிங்கம், சுந்தரசுப்ரமணியம் உள்ளிட்டோர் நாங்குநேரி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.
திருக்குறுங்குடி ஜீயர் மடாதிபதி, நெல்லை இந்து அறநிலையத்துறை இணைஆணையர், ஆணையர் (சென்னை), மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மீதுவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று நாங்குநேரிகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் சமீபத்தில்உத்தரவிட்டிருந்தது.
இதன்படி வேகமாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ராஜவேலு அளித்த தீர்ப்பில், சிவன் கோவிலை இடித்தது செல்லாது. எனவே 3மாதத்திற்குள் அதே இடத்தில் கோவிலை எழுப்பி, சிவன் சிலை பழையபடி அதேஇடத்தில் வைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


Click it and Unblock the Notifications
