அன்புவுக்கு சிவசக்தி பாண்டியன் கொலை மிரட்டல்?
சென்னை:
மதுரை-ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின்தலைவர் அன்புச் செழியனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கொடுக்கப்பட்டுள்ளபுகாரின் பேரில், பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் போலீஸார்விசாரணை நடத்தினர்.
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் உள்ளதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின்ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அன்புச் செழியனின் செல்போனில் தொடர்புகொண்ட ஒருவர், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வினியோகஸ்தர்கள்சங்க நிர்வாகிகளை தாறுமாறாக விமர்சித்ததுடன், அனைவரையும் தொலைத்துவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் பாதியில்நிறுத்தப்பட்டு, தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் மாநகர காவல்துறைஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர்.
பின்னர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அன்புச் செழியின் எழுத்துப்பூர்வமாககொடுத்த புகாரில்,
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன் ஆகியோருக்குஆதரவாக செயல்படக் கூடாது. இல்லாவிட்டால் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என என்னிடம் போனில் பேசியவர் மிரட்டல் விடுத்தார் என்றுகூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அன்புச்செழியனுக்கு வந்த தொலைபேசி எண் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுடைய எண்எனத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு பாண்டியனுக்கு போலீஸார்உத்தரவிட்றானர். அதை ஏற்று இன்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்குப்பாண்டியன் வந்திருந்தார்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில்பிளவு ஏற்பட்டு அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன் நீக்கப்பட்டார். பின்னர் அவர் தனது பதவியைராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந் நிலையில் பிரபல தயாரிப்பாளர் சிவசக்திபாண்டியன் மீது கொலை மிரட்டல் புகார் எழுந்துள்ளது மீண்டும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications