காங்கிரஸில் சீட் கேட்ட விபச்சார அழகிகள்!
சென்னை:
காங்கிரஸ் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பம்செய்திருந்த 2 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீஸில் சிக்கியுள்ளனர்.
பல காலமாக இவர்கள் இருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சி-டைப் பிரிவில் வசித்து வருபவர்பழனியப்பா பிள்ளை. இவரது வீட்டில் வாடக்ைகு சிலர் இருந்தனர்.
அந்த வீட்டிற்கு ஆண்களும், பெண்களும் அதிக அளவில் வந்து போனதால்சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த வீட்டை திடீர் சோதனையிட்டனர். அப்போதுவீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாக மகாலிங்கம் என்பவரின் மனைவி மாலதி,
குமரேசன் என்பவரது மனைவி மாலதி, சகாயம் என்பவரின் மனைவி அனுசுயாமற்றும் தவுலத் பானு உள்ளிட்ட 5 பெண்கள் சிக்கினர்.
இவர்களுடன் ஜாலியாக இருந்ததாக முகம்மது, தண்டபாணி, பாஸ்கர் ஆகிய 3ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட விபச்சார அழகிகளில் சுமதியும், அனுசுயாவும் வரும் சட்டமன்றத் தேர்தலில்காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பல காலமாக விபச்சாரத்தில்ஈடுபட்டு வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications