கேரளா சட்டம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகதலையிட்டு கேரள அரசின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுகதலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில்,தமிழக அரசு உச்சநீதிமன்றம் போகப் போவதாகக் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் வரை அமைதி காத்து வந்த தமிழகஅரசியல் கட்சிகள் அத்தனையும் இப்போதுதான் வாய் திறக்க ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பாக கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம்எழுதியுள்ளார். அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தங்களுக்குத்தெரிந்திருக்கும்.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்த திமுகவும், தமிழக மக்களும் நீண்ட காலமாககுரலெழுப்பி வருகிறோம். ஆனால் கேரள அரசோ, உச்சநீதிமன்ற உத்தரவைதந்திரமாக மீறும் வகையில், ஒரு அவசரச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

கேரள அரசின் இச்செயல் சட்டத்துக்கும், நீதித்துறைக்கும் எதிரானதாகும். தேசியஒருமைப்பாடு, கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரான ஒரு முயற்சி இது. எனவே மிகநெருக்கடியான இத்தருணத்தில், தாங்கள் தலையிட்டு உச்சநீதிமன்ற உத்தரவை காக்ககோருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+