தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை நீக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமிக்கு வயது வரம்பைத் தளர்த்தி தமிழக அரசுபணி நீட்டிப்பு கொடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.

தமிழக தேர்தல் ஆணையராக இருந்து வரும் பழனிச்சாமிக்கு பதவி நீட்டிப்புகொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில், தமிழக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில்தமிழக அரசு திருத்தம் செய்தது. இதன் மூலம் தேர்தல் ஆணையர் பதவிக்கான வயதுவரம்பு நீக்கப்பட்டது.

இதை எதிர்த்து சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசின் சட்டத் திருத்தம் செல்லாது,பழனிச்சாமிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றுஅவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்றுஉத்தரவிட்டு நேற்று தீர்ப்பளித்தனர்.

இந் நிலையில் இன்று, பழனிச்சாமிக்கு பணி நீட்டிப்பு கொடுத்தது செல்லாது என்றுநீதிபதிகள் இன்னொரு தீர்ப்பை வழங்கினர்.

தங்களது தீர்ப்பில், பழனிச்சாமிக்கு பதவி நீட்டிப்பு கொடுத்தது செல்லாது.இதுதொடர்பாக அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தமும் செல்லாது.

நான்கு வாரங்களுக்குள் புதிய ஆணையர் தொடர்பான மாற்று நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும். அதுவரை பழனிச்சாமி அப்பதவியில் நீடிக்கலாம் எனகூறியுள்ளனர்.

தனது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் பழனிச்சாமி பாலியல்சீண்டல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

இது தொடர்பாக பெண் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதும்நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட ஒருவருக்குத் தான் சட்டத்தையே திருத்தி பதவிநீடிப்பு தந்துள்ளது தமிழக அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+