ப.சியின் அரண்மனை மனோபாவம்: காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தருக்கு, செருக்கு, அரண்மனை மனோபாவத்துடன் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்பேசி வருகிறார் என்று அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,

சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.ஆனால் எந்த ஆட்சியில் என்பதை சொல்ல முடியாது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.இது அவரது தருக்கு, செருக்கு, அரண்மனை மனோபாவத்தையே காட்டுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதுதான் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்தயாரிக்கப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில்தான் இந்தத் திட்டம் பயனுக்கு வரும்.இதை ஒரு சிதம்பரம் அல்ல, எத்தனை சிதம்பரங்கள் வந்தாலும் தடுக்க முடியாது.

மத்திய அரசுக்கு புறம்பான மாற்றுக் கட்சி அரசுகள் மாநிலத்தில் இருந்தால்அவற்றுக்கு மத்திய அரசு உதவி செய்யாது என்ற முரட்டு ஆதிக்க மனப்பான்மையைபிரதிபலிப்பதாக சிதம்பரத்தின் பேச்சு உள்ளது.

பாதுஷா மனப்பாங்குடன் சிதம்பரம் பேசி வருகிறார். அவரது பேச்சுதான் மத்தியஅமைச்சர்களின் மனப்பாங்கு என்றால், இத்தகைய மனப்பாங்கு கொண்டஅமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் நீடிப்பது நாட்டுக்கு நலன் தருமா?

பிகார், உ.பி. போன்ற மாநிலங்களில் மாறுபாடு கொண்ட அமைச்சர்கள் கூட மத்தியஅமைச்சரவையில் இருக்கிறார்கள். ஆனால் மாநில நலன் என்று வந்தால் கருத்துவேறுபாடுகளை மறந்து விட்டு பாடுபடுகிறார்கள்.

அவர்களிடம் சிதம்பரம் போன்றவர்கள் டியூஷன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆபத்தான, அரண்மனை மனோபாவ, சுல்தான் பாணி பேச்சுக்கு சட்டசபைத் தேர்தலில்மக்கள் சரியான பாடம் போதிப்பர் என்றார் மாஜி சபா காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+