தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது
மதுரை, ராமநாதபுரம் மாவட்ட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் அன்புச் செழியனுக்கும்,தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி பிரபலதயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டுஆலோசனைக் கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடந்தது.அப்போது தனக்கு தொலைபேசி மூலம் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தாக அன்புச் செழியன் கூறினார். மேலும்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான ஏ.எம்.ரத்னம், அழகப்பன் ஆகியோருக்கு ஆதரவாகசெயல்பட்டால் சுட்டு வீழ்த்தி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டியதாக அன்பு கூறினார்.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில்புகார் கொடுத்தனர். செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டிய நபரின் தொலைபேசி எண்ணை போலீஸார்கண்டுபிடித்தனர்.
அது சிவசக்தி பாண்டியனின் எண் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு வருமாறுபோலீஸார் அழைத்தனர். ஆனால் பாண்டியன் விசாரணைக்கு வருவதாகக் கூறிவிட்டு கடைசி நேரத்தில்வரவில்லை.
இதைத் தொடர்ந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள பாண்டியனின் அலுவலகத்திற்குச் சென்ற போலீஸார் அங்கிருந்தபாண்டியனைக் கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவாக்குமூலம் பெற்றனர்.
பின்னர் அவரை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். வருகிற 28ம்தேதி வரை பாண்டியனை சிறையில் அடைக்குமாறு நீதிபதி கோவிந்தராஜுலு உத்தரவிடடார்.
தயாரிப்பாளர்களுக்கு பெரும் வட்டிக்குப் பணம் தருவது, நடிகைகள் ரம்பா, தேவயானி ஆகியோரை மிரட்டியதுஉள்பட அன்புச்செழியன் மீது சினிமாத்துறையில் பலவகையான புகார்கள் கூறப்பட்டது உண்டு என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவர் சசிகலாவின் பினாமி என்று கூட பத்திரிக்கைகளில் செய்தி வந்ததுண்டு. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைஎல்லாம் அன்புச்செழியன் மறுத்துள்ளார்.
சிறிய அளவில் ஒரு தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த சிவசக்தி பாண்டியன், காதல் கோட்டைபடத்தைத் தயாரித்ததன் மூலம் கோலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications