குமுதம் மீதான பாமக வழக்கு தள்ளுபடி
சென்னை:
தமிழ் வார இதழான குமுதம் ரிப்போர்ட்டர் மீது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்அன்புமணி ராமதாஸ் சார்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி, சென்னை எழும்பூர்பெருநகர நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது.
கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி வெளியான அந்த இதழில்,சுனாமி நிவாரணத்திற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு, சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய நிதியில் ரூ. 50 கோடி சுருட்டப்பட்டு விட்டதாககட்டுரை வெளியாகியிருந்தது.இந்தக் கட்டுரையைக் கண்டித்து பாமகவினர் குமுதம் அலுவலகத்தின் மீது தாக்குதல்நடத்தி போராட்டம் செய்தனர். இந் நிலையில் அன்புமணியின் புகழைக் குலைக்கும்வகையில் அவதூறாக இந்த கட்டுரை பிரசுரமாகியுள்ளதாக கூறி பாமக தலைவர்ஜி.கே.மணி, அன்புமணி சார்பாக சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
இதை எதிர்த்து குமுதம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில்எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்யக்கோரப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், ஜி.கே.மணியின் மனுவில்கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும், சம்பந்தப்பட்ட கட்டுரைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. மணிக்கும், இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.கட்டுரைக்கும், பாமகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அன்புமணி ராமதாஸின் அரசியல் நடவடிக்கை குறித்து கட்டுரையில் எங்கும்குறிப்பிடப்படவில்லை. பாமக குறித்தோ, அமைச்சர் அன்புமணி ராமதாஸ் குறித்தோஅவதூறாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் பாமகவை குறி வைத்து இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. செஞ்சிலுவைச்சங்கம்தான் இந்தக் கட்டுரை குறித்து கேள்வி எழுப்ப முடியும்.
பாமகவோ, அன்புமணியோ இதில் கேள்வி கேட்கவே முடியாது. எனவேஜி.கே.மணியால் இந்த வழக்கை தொடர முடியாது, அதற்கான தகுதியும் உரிமையும்மனுதாரருக்கு இல்லை என்று கூறி எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளவழக்கையும், அதுதொடர்பான மேல் விசாரணையையும் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications