மதுரை பல்கலையில் வேலைவாய்ப்பு திருவிழா!
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலை வாய்ப்பு திருவிழா,பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வ. அரங்கில் மார்ச் 18 மற்றும் 19 ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதியதுணைவேந்தராக பேராசிரியர் மருதமுத்து பதவியேற்ற பின்னர்,
மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் தேடித்தரும் வகையில் ஒரு குழுவை அமைத்தார்.
![]() |
பல்கலைக்கழக டீன் (தொழிற்சாலை ஆலோசனைப் பிரிவு) டாக்டர் பி.ஆர்.ஆத்தப்பன்தலைமையிலான இக் குழுவின் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி,தனித்திறமை வளர்ப்புக்கான பயிற்சிகள் வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
இப்போது இக் குழுவின் முயற்சியால் சேலத்தைச் சேர்ந்த அஸ்கான் அசோசியேட்கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனம், பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ளகல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலைமாணவர்களுக்காக வேலைவாய்ப்பு திருவிழாவை நடத்தவுள்ளது.
அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் உதவி அதிகாரி மற்றும் பரிவர்த்தனைகண்காணிப்பு அதிகாரி பணியிடங்களுக்காக இந்த வேலை வாய்ப்பு திருவிழாநடத்தப்படவுள்ளது.பல்கலைக்கழக மு.வ.அரங்கில் மார்ச் 18 (நாளை) மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில்இந்த வேலை வாய்ப்பு திருவிழா நடைபெறவுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் டிப்ளமோ,இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவியர்இந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் பங்கேற்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.
இதில் பங்கேற்க விரும்புவோர், தங்களது விவரங்கள் அடங்கிய பயோடேட்டா (2பிரதிகள்), 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், இளநிலை மாணவர்கள் என்றால்ஐந்தாவது செமஸ்டர், முதுநிலை மாணவர்கள் என்றால் 3வது செமஸ்டர் மதிப்பெண்சான்றிதழின் நகல்களை கொண்டு வர வேண்டும்.
கடைசி செமஸ்டரில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவ, மாணவியர்மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். மேலும், எந்தவிதமான அரியரும் இருக்கக்கூடாது. ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றுள்ளவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.
வாய்மொழித் தேர்வு, ஆங்கில புலமை அறியும் தேர்வு, கேள்விஞானம் அறியும்தேர்வு, நேர்காணல் என நான்கு பிரிவாக தேர்வு நடைபெறும்.
வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.1,20,180 என ஊதியம் வழங்கப்படும். தாங்கள் படித்து வரும் கல்லூரி முதல்வரின்அறிமுகக் கடிதத்துடன் மு.வ. அரங்குக்கு 18ம் தேதி காலை 9.45 மணிக்கு மாணவ,மாணவியர் வந்து சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு இறுதிச் சுற்றின்போது வேலை நியமன கடிதம்வழங்கப்படும்.
இவர்கள் தவிர, இளநிலை, முதுநிலை பட்டதாகளும் இந்த வேலைவாய்ப்புதிருவிழாவுக்கு வரலாம். அவர்கள் 65 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்களைப்பெற்றிருக்க வேண்டும்.
அத்தோடு, விற்பனை, மார்க்கெட்டிங், சாப்ட்வேர் தொழிலில் 2 ஆண்டு அனுபவம்பெற்றவர்களாக இருக்க வேண்டும். யூனிட் மேலாளர், விற்பனை மேலாளர்பதவிகளில் அவர்கள் அமர்த்தப்படுவர். அவர்களது ஆண்டு ஊதியம் குறைந்தது ரூ.2.5 லட்சமாக இருக்கும்.
இதேபோன்ற, அதேசமயம் மிகப் பிரமாண்டமான அளவில் வருகிற ஜூலை-ஆகஸ்ட்மாதத்தில் இன்னொரு வேலைவாய்ப்புத் திருவிழா பல்கலைக்கழகத்தில்நடைபெறவுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு தேர்வு முடிவுகள்வெளியான பின்னர் மிகப் பிரமாண்டமான அளவில் இந்த வேலைவாய்ப்புத்திருவிழா நடத்தப்படவுள்ளது.
பல்வேறு பெரிய நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு வேலைக்கு ஆட்களைத்தேர்வு செய்யவுள்ளனர்.
தொடர்பான செய்திகள்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஃபார்ச்சூன் நிறுவனம், மதுரையைச் சேர்ந்தகிளாசிஸ் லேப்ஸ் நிறுவனம், மதுரை பாரத் ஓவர்சீஸ் வங்கி, சென்னை சன்மார்ஸ்பொஷிலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனம், சென்னை ஆர்க்கிட் கெமிக்கல் மற்றும்பார்மச்சூட்டிகல்ஸ் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.ஆர்.எப். பார்மசூட்டிகல்ஸ்ஆகியவையும் மதுரை பல்கலையில் வேலைவாய்ப்பு திருவிழாவை நடத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications