கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்: விஜயகாந்த்
மதுரை:
கருத்துக் கணிப்பு எல்லாம் வெறும் புரளி. அவற்றை மக்கள் நம்பக் கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிடகழக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் 3 நாள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர்,ஹார்விப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிராசரம் செய்தார்.திருப்பரங்குன்றத்தில் அவர் பேசுகையில், இது எனக்கு ரொம்பப் பழக்கமான ஊர். சிறு வயதில், அடிக்கடிமுருகன் கோவிலுக்கு வருவேன். மலை மேல் உள்ள தர்காவுக்கும் போவேன். எனது சொந்த ஊர் என்பதால்தான்திருப்பரங்குன்றம் அருகே கட்சி தொடக்க விழாவை நடத்தினேன்.
நான் வந்து போன பிறகு இங்கு நல்ல மழை பெய்து கண்மாய்கள் எல்லாம் நிரம்பியுள்ளன. இதை நல்ல சகுனம்என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். (ரொம்ப நல்லவரு)
திமுக, அதிமுகவுக்கு வாக்காளிப்பதை மக்கள் நிறுத்தினாலே 50 சதவீத ஊழல், லஞ்சம் குறைந்து விடும்.எனவேதான் எனது கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள், நான் லஞ்சத்தை ஒழித்துக் காட்டுகிறேன் என்று தொடர்ந்துகூறி வருகிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், மாவட்டம்தோறும் முதியோர் இல்லங்களைத்திறப்போம். சொன்ன வாக்குறுதியை ஒன்று விடாமல் நிறைவேற்றுவோம்.
கூட்டணி சேர வேண்டுமா என்று மக்களிடம் நான் கேட்டேன். வேண்டாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். மக்களுடன் எனது கூட்டணி இருக்கும்போது மாற்றுக் கூட்டணிதேவையில்லை. (இது 2 வாரத்துக்கு முன்பு வரை ஜெயலலிதா சொல்லிக்கிட்டே இருந்த வசனமாச்சே)
எனது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூட்டணி வேண்டும் என்றார்கள். கூட்டணி வேண்டும் என்றால்விலகிப் போங்கள், தொண்டர்களை வைத்து கட்சி நடத்திக் கொள்கிறேன் என்று கூறி விட்டேன்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்கிறார்கள். கூட்டணி அமைத்தால் ஆட்சியில் பங்கு தர வேண்டும்.தந்தால் நானும் ரெடி.
அடுத்து கருத்துக் கணிப்பு என்று புரளியைக் கிளப்புகிறார்கள். 2 லட்சம் பேர் இருக்கும் இடத்தில் 600 பேரிடம்மட்டும் கருத்து கேட்டு கருத்துக் கணிப்பு என்றால் எப்படி அதை நம்புவது? இதெல்லாம் வெறும் புரளி.
இதை யாரும் நம்பக் கூடாது. மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது உங்களது பொறுப்பு என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications