அம்மா கூப்பிடுறாங்க-புரளியால் ஏமாந்த கட்சி
சென்னை:
கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா பேசக் கூப்பிட்டுள்ளதாக வந்த புரளியால் கார்கள்புடைசூழ அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குச் சென்று ஏமாந்துள்ளனர்கிறிஸ்துவ மக்கள் கட்சி என்ற குட்டிக் கட்சியின் நிர்வாகிகள்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற குட்டிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. பல குட்டிக் கட்சிகளின் தலைவர்கள், அதிமுக அலுவலகத்திலேயே தவம்போல காத்திருக்கிறார்கள்,அம்மாவிடமிருந்து அழைப்பு வராதா என்று.
கூப்பிடாமலேயே கட்சி அலுவலகத்துக்கு வந்து மந்திரி ஓ.பி. தலைமையிலானதேர்தல் பணிக் குழுவிடம் கூட்டணி பேச முயன்று வருகின்றனர். சில லெட்டர் பேட்கட்சிகள் சீட்டெல்லாம் வேண்டாம், காசு மட்டும் குடுங்க உங்களுக்கு பிரச்சாரம்செய்கிறோம் என்று சொல்லி லெட்டர் பேடில் ஆதரவுக் கடிதத்தைத் தந்துவருகின்றனர்.
இதில் எல்ரோரையும் சந்திக்க முடியாத ஓ.பி. தலைமையிலான குழு சிலரை கூப்பிட்டுஅடுத்த தேர்தலில் பார்க்கலாம் என கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந் நிலையில் அம்மா பேசக் கூப்பிடுகிறார், உடனே போங்கள் என்று வந்த ஒருதொலைபேசி அழைப்பால் பெரும் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளது கிறிஸ்தவ மக்கள்கட்சி என்ற கட்சி.
வண்டலூர் ஜான் என்பவர்தான் இந்தக் கட்சியின் தலைவர். இவரது செல்போனுக்குஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தலைவரே, அம்மா உங்களதுகட்சியுடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டார். பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.உடனே போய் பேச்சுவார்த்தை நடத்துங்கள், அதிமுக கட்சி தலைமைஅலுவலகத்திற்கு கிளம்பிப் போங்கள் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் வண்டலூர் ஜான், சந்தோஷத்தில் குதிக்காத குறையாக, தான் நடத்திவரும் மக்கள் பொது நல மையத்தின் தலைவர் ஷாகுல் அமீது, துணைத் தலைவர்ருத்திரகுமார் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்து வாங்க போய் பேசி விட்டு வரலாம்என்று கூறி கிளம்பினர்.
5 கார்களில் ராயப்பேட்டைக்கு விரைந்த அவர்கள் அதிமுக தலைமைஅலுவலகத்திற்கு மாலை, பொன்னாடை சகிதம் போய், நாங்கள் வந்து விட்டோம்,அம்மாவை எங்கு பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஒன்றும் புரியாமல் குழம்பிய அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், நீங்கெல்லாம்யாரு, உங்களை யாரும் கூப்பிடவில்லையே என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சிஅடைந்த வண்டலூர் ஜான், இல்லை எங்களுக்கு போன் வந்தது. அதனால்தான்வந்தோம் என்று கூறியுள்ளார்.
ஆனால், அம்மா உங்களது கட்சியைக் கூப்பிடவில்லை. யாரோ புரளிகிளப்பியிருக்கிறார்கள் என்று கூறியபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதைஉணர்ந்துள்ளனர்.
தொலைபேசியில் தகவல் கொடுத்த மர்ம நபரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதத்தைஅனுப்பியுள்ளார்களாம்.
ஹா...ஹா...ஹா...












Click it and Unblock the Notifications