கலெக்டர் ஆபிசில் குண்டு புரளி-ஊழியர்கள் ஓட்டம்
கடலூர்:
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனவந்துள்ள மிரட்டல் கடிதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு குமரக்குடி என்ற இடத்திலிருந்துபோஸ்ட் செய்யப்பட்டுள்ள கடிதத்தில்,காங்கேசநல்லூர் இளைஞர்கள் என்ற பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை (நாளை) மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடித்துச் சிதறும் என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பெரும் பீதி ஏற்பட்டது.பணியில் இருந்த ஊழியர்கள் பதறி ஓடினர். அலுவலகமே பெரும் பரபரப்பில்மூழ்கியது.
தகவல் அறிந்ததும் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் முழுவதையும் சல்லடை போட்டுஅவர்கள் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் நாளை வெடிகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால்போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணைநடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications