பாஜக கூட்டணிக்கு தயாராகும் கார்த்திக்-டிஆர்?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அதிமுகவும் நடராஜனும் தன்னை நம்ப வைத்து ரப்பர் பிளேடால் தனது கழுத்தைபதம் பார்த்துவிட்டதால் வெறுத்துப் போய்விட்ட கார்த்திக் பாஜகவுடன் கூட்டணிஅமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக உள்ள கார்த்திக்குக்கும், பொதுச்செயலாளர் சந்தானத்திற்கும் இடையே ஏற்பட்ட உரசலால், அதிமுக கூட்டணியில்கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சி சேருவதில் பெரும் சிக்கல் நிலவிவருகிறது.

சந்தானத்தை மட்டும் தனியே கூப்பிட்டு அவருக்கு ஒரு சீட் கொடுத்து பார்வர்ட்பிளாக் கட்சியையே உடைத்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

இந் நிலையில் அதிமுக கூட்டணிக்காக இன்னும் கார்த்திக் காத்திருக்கிறார். (ரொம்பபொறுமை). ஆனால் ஜெயலலிதா அவரை கண்டு கொள்வதாக இல்லை.

இந் நிலையில் மதுரையில் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தை கார்த்திக் கூட்டிஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தார். பின்னர் வெளியே வந்த அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அதிமுக கூட்டணிக்காக இன்னும் கூட காத்திருக்கிறோம். எங்களை மதித்து,பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போவோம்.

அதிமுகவிடமிருந்து பதில் வருவதற்கு காலக்கெடு எதையும் நாங்கள்நிர்ணயிக்கவில்லை. அதற்காக நீண்ட காலம் காத்திருக்க முடியாது. (ஆமா.. அப்புறம்எலெக்ஷன் முடிஞ்சிடும்).

எந்தவித பதிலும் வராவிட்டால் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். அதற்கும்நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார் கார்த்திக்.

இதற்கிடையே அதிமுக கடைசிவரை இப்படியே விட்டுவிடலாம் என்பதைஎதிர்பார்க்கும் கார்த்திக் தரப்பு ஒரு சேப்டிக்காக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதுகுறித்தும் பேசி வருகிறது.

திமுக கூட்டணியை கட்சியில் உள்ள பெரும்பாலான முக்குலத்தோர் நிர்வாகிகளும்தனது ரசிகர்களும் விரும்பாததால் அதிமுக இல்லாவிட்டால் தனியே அல்லது வேறுகட்சியுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டிய நிலையில் கார்த்திக் உள்ளார்.

தங்களுடன் கூட்டணிக்காக கார்த்திக் பேசி வருவதாக பாஜக தேசிய செயற்குழுஉறுப்பினரும் குமரி அனந்தனின் மகளுமான டாக்டர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அப்படியே விஜய டி.ராஜேந்தரும், ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜெகத்ரட்சகனும் பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகதமிழிசை கூறியுள்ளார்.

போயஸ் கார்டனுக்கு லால்குடி, சென்னை பூங்கா நகர் உள்பட 5 தொகுதிகளின்பட்டியலுடன் போன விஜய.டி.ராஜேந்தருக்கு சரியான மூக்கறுப்பு தான் மிஞ்சியது.

உங்களுக்கு ஒரே ஒரு தொகுதி தான் என்று அமைச்சர் ஓ.பி கூற, என்னங்க இப்பிடிபேசுறீங்க.. நான் அதிமுகவுக்காக எவ்வளவு பேசியிருக்கேன் என்று ஆரம்பித்து நீண்டவசனம் பேசியிருகிறார் டி.ஆர்.

இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப் போகவே, டி.ஆரைக் கூப்பிட்டு உங்களுக்கு ஒருதொகுதி கொடுப்பது பற்றிக் கூட இன்னும் முடிவு செய்யவில்லை. இதனால் 234தொகுதிகளிலும் போய் பிரச்சாரத்தை கவனியுங்கள். சீட் கொடுப்பதாக இருந்தால்நாங்களே கூப்பிடுவோம் என்று கூறிவிட்டார்.

இதையடுத்து வருங்கால முதல்வர் கனவில் இருக்கும் டி.ஆர். நொந்து, வெந்து,சுவரில் எரியப்பட்ட பந்து மாதிரி போயஸ் கார்டனில் இருந்து திரும்பி வந்திருப்பதாகதகவல்கள் வருகின்றன.

அதிமுக தனக்கு ஒரு சீட் கொடுக்காமல் விட்டால் என்ன செய்வது என்றுதெரியாததால் அவரும் பாஜகவை ஸ்டாண்ட்பை ஆக வைத்துள்ளார்.

ஏற்கனவே சுப்பிரமணியம் சுவாமியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயன்று வருவதும், விஜய்காந்தைஇழுக்க பாஜக முயன்று வருவதும் தெரிந்ததே.

இந் நிலையில் முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகனின் ஜனநாயக முன்னேற்றக் கழகம்வரும் 20ம் தேதி முதல் சீட் கோருவோரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுகிறது.

பொதுத் தொகுதிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண்கள் ரூ. 5,000மும்,பெண்கள் ரூ. 3,000மும், தனி தொகுதிகளுக்கு ஆண்கள் ரூ. 2,000மும்,பெண்களுக்கு ரூ. 1,000மும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+