ரஜினியை எதிர்த்து ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்
சேலம்:
தலைவா நீங்கள் சுயநலவாதியா, சந்தர்ப்பவாதியா, சூழ்நிலைவாதியா என்றுசரமாரியாக கேட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் சேலத்தில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏதாவது தேர்தல் வந்தால் அதில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்றகேள்வி கடந்த சில வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் திமுக-தமாகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினி பின்னர் பாமகவின்கடும் எதிர்ப்பில் சிக்கினார்.
அப்போது திமுக பெருத்த மெளனம் காத்ததால் அதிருப்தி அடைந்த அவர்அதிமுக-பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தார்.
கடந்த சில தேர்தல்கள் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவத்தை மனதில் கொண்டுஇனிமேல் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டார்ரஜினி.
அதற்கு பாபா படத்திற்கு பாமகாவால் நேர்ந்த கதியும் ஒரு முக்கிய காரணம்.
இந் நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் எனது ஆதரவில்லை,ரசிகர்கள் அவர்களது விருப்பம் போல வாக்களித்துக் கொள்ளலாம் என ரஜினியின்சார்பில் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணன் அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. நான் அரசியலுக்குவருவேன் என்பது போன்ற தோற்றத்தை ரசிகர்கள் மத்தியில் ரஜினி தான்ஏற்படுத்தினார்.
இந் நிலையில் இத்தனை நாட்களாக நம்மை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் ரஜினிஎன அவரது அரசியல் ஆர்வம் கொண்ட ரசிகர்கள் தரப்பு கருதுகிறது.
இது சேலத்தில் சுவரொட்டி ரூபத்தில் வெளிப்பட்டுள்ளது. சேலம் மாநகரின் பல்வேறுபகுதிகளில் உங்களை நம்பிய ரசிகர்களின் அவலக் குரல் என்ற பெயரில் ஏராளமானசுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சர்ச்சையில் சிக்கியுள்ள சுவரொட்டியில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அப்படியேகீழே....
தலைவா, நீங்கள் சரியான முடிவு எடுக்காததன் விளைவு!
1996-ல் முதல்வர் பதவியை இழந்தீர்கள்!
1998-ல் அமைதியை இழந்தீர்கள்!
2004-ல் தன்னம்பிக்கையை இழந்தீர்கள்!
2006-ல் உங்களை வாழ வைத்த ரசிகர்களை இழக்க இருக்கிறீர்கள்!
தலைவா நீங்கள் சூழ்நிலைவாதியா?
சுயநலவாதியா.? சந்தர்ப்பவாதியா?
இங்ஙனம்
உங்களை நம்பியிருந்த ரசிகர்களின் அவலக்குரல், சேலம்.
இவ்வாறு அந்த சுவரொட்டிகளில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரஜினிரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே இதை ரசிகர்கள்தான் ஒட்டினார்களா என்ற விவாதமும் ரசிகர்கள்மத்தியில் கிளம்பியுள்ளது.
விஷமிகள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று ரஜினியின் தீவிர ரசிகர்கள்கூறுகின்றனர்.
இந் நிலையில் ரஜினியின் ஆதரவைப் பெற அதிமுக தரப்பு தீவிரமாக முயன்று வருவதாகத் தெரிகிறது. ரஜினியைராஜ்யசா எம்பியாக்குகிறோம் என்று சொல்லி ரஜினி குடும்பத்தினரை அதிமுக தரப்பு தொடர்பு கொண்டதாகவும்,அந்தக் கதையே வேண்டாம் என ரஜினி நோ சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications