பாதுகாப்பு கோரும் 116 குண்டுவெடிப்பு கைதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள 116 கைதிகள் தங்களுக்குப் பாதுகாப்பு கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாகஅல்-உம்மாவைச் சேர்ந்த பாஷா, அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 166 பேர் கைதுசெய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது கடந்த 7 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. இந் நிலையில்,கோவை சிறையில் உள்ள 116 கைதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வுமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கோவை சிறையின் ஜெயிலராக பழனி, பொறுப்பு அதிகாரியாக கனகராஜ்ஆகியோர் பொறுப்பேற்றது முதல் குண்டுவெடிப்புக் கைதிகள் அனைவரும்கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட சிகிச்சை தரப்படுவதில்லை.

செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வார்டன்களும், போலீஸாரும்தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

எங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதால் எங்களுக்கு உரியபாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

மேலும், சிறையில் உள்ள 4 ஜெயிலர்கள், 9 வார்டன்கள் மீது துறைரீதியாக மற்றும்குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். மனித உரிமைஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துவிசாரணையும் நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார்ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சிறைத்துறைகூடுதல் டிஜிபி, டிஐஜி, கோவை டிஐஜி, சிறைத்துறை எஸ்.பி, ஜெயிலர்கள்,வார்டன்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+