நடராஜ்: நீதிமன்றத்தில் திமுக அமைச்சர் மனு
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தொடர்பான வழக்கில் தன்னையும்ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல்அமைச்சர் ஏ.ராஜா மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசினார் நடராஜ்.இதையடுத்து அவர் மீது தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் ராஜா புகார் கொடுத்தார்.அந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் நடராஜ் விதிமீறல் ஈடுபட்டதால்அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாஜி டிஜிபிக்களான தேவாரம், பரமகுரு, தமிழக உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, வரும் 23ம் தேதி வரை இடமாற்ற உத்தரவைநிறுத்தி வைப்பதாகவும், அதுவரை புதிய ஆணையருக்கான பட்டியலை கோரமாட்டோம் எனவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில் மத்திய அமைச்சர் ராஜா சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில்,
எனது மனுவின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் ஆணையர் நடராஜைஇடமாற்றம் செய்யும் முடிவை எடுத்தது. எனவே நீதிமன்றத்திலும் எனது கருத்தைப்பதிவு செய்யும் வகையில், என்னையும் ஒரு மனுதாரராக இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
22ம் தேதி விசாரணையின்போது ராஜாவின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications