ரஜினியை மீறும் ரசிகர்கள்: ஜெவுடன் சந்திப்பு- தேர்தலில் போட்டியிட திட்டம்?
சென்னை:
புதுவை மற்றும் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து, தங்களது ஆதரவை அதிமுகவுக்குத் தெரிவித்தனர்.
அரசியல் வேண்டாம் என்று ரஜினி விலகினாலும் பாபா விவகாரத்தில் பழிக்குப் பழிதீர்ப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 31 தொகுதிகளிலும் ரஜினிமன்றங்கள் சார்பில் வேட்பாளர்களை களத்தில் இறக்க (ரஜினியின் உத்தரவையும் மீறி)ரஜினி ரசிகர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.இதுதொடர்பாக காரைக்குடியில் கூட்டம் போட்டு முக்கிய முடிவை எடுக்கவும்அவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந் நிலையில் தஞ்சை மாவட்ட ரசிகர் மன்றச் செயலாளர் ஹுமாயூன்தலைமையிலான நிர்வாகிகள், புதுவை ரஜினி மன்றச் செயலாளர் ரஜினி சங்கர்தலைமையிலான ரசிகர்கள் முதல்வர் ஜெயலலிதாவை இன்று திடீரென சந்தித்தனர்.
ஜெயலலிதாவுக்கு பொன்னாடை போர்த்திய அவர்கள் வரும் தேர்தலில் அதிமுகவுக்குஆதரவாக தீவிரமாக செயல்படப் போவதாக தெரிவித்தனர். அவர்களது ஆதரவைஏற்றுக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
தஞ்சை, புதுவையைப் போல மேலும் பல மாவட்ட மன்றங்களும் அதிமுகவுக்குப்பின்னால் அணி திரளக் கூடும் என்று தெரிகிறது.
ரஜினியை மீறும் ரசிகர்கள்:
பாபா படம் ரிலீஸானபோது பாமகவினரின் அதிரடி அட்டாக் நடவடிக்கையால் அப்படம் பெரும் பிரச்சினையை சந்தித்தது. வட மாவட்டங்கள்பலவற்றில் பாபா படத்தை ஓட விடாமல் பாமகவினர் பெரும் வன்முறையிலும், ரகளையிலும் ஈடுபட்டனர்.
படமும் சரியில்லாத காரணத்தால் பாபா ஓடவில்லை, பெரும் தோல்விப்படமாக மாறியது. திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் எனஅனைத்துத் தரப்பினரும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
பாமகவினரால் சந்தித்த பிரச்சினைகள் ரஜினியை ரொம்பவே அப்செட் செய்து விட்டது. இதை மனதில் வைத்தும், ரசிகர்களின் கோபத்தை குறைக்கும்வகையிலும், 2004 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அதிமுக-பாஜக அக்கட்சிக்கு எதிராகதனது ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என ரஜினி அறிவித்தார். ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லாமல் போய் விட்டது.
இதையடுத்து அரசியலில் இருந்து முழுவதுமாகவே ஒதுங்கிவிட்டார் ரஜினி.அரசியலுக்கும், தனக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது என்பதை ரஜினி புரிந்துகொண்டார். ஆனால் ரசிகர்கள் அப்படி நினைக்கவில்லை. தாங்கள் இன்னும் ஒருசக்திதான் என்று அவர்கள் பிடிவாதமான கருத்தில் உள்ளனர்.
நேற்று அரசியலுக்கு வந்த விஜய்காந்தின் ரசிகர்கள் எல்லாம் கரை வேட்டிசட்டையுடன், வெள்ளை செருப்பு, துண்டுடன், டாடா சுமோக்களில் தேர்தல்வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க 10 வருடமாய் இதோ வரப்போறேன் என்று சொல்லி வந்த ரஜினியை நம்பியிருந்த அவரது அரசியல் ஆர்வம்மிக்க ரசிகர்கள் தரப்பினர், விஜய்காந்த் ரசிகர்களைப் பார்த்து பெரும் சோகத்திலும்கோபத்திலும் உள்ளனர்.
இது சமீபத்தில் கோவையில் எதிரொலித்தது. பாமகவுக்கு எதிராக கோவையில் ரஜினிரசிகர்கள் பெயரில் பெரும் யுத்தம் மூண்டது. பாமகவினரும் பதிலுக்கு மல்லுக் கட்டபிரச்சினை வெடித்தது. சிவாஜி படம் வெளியாகப் போகும் சூழ்நிலையில் இப்படிஒரு பிரச்சினையா என்று யோசித்துப் பார்த்த ரஜினி,
தனது உதவியாளர் சத்யநாராயணன் மூலம், எனது ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை,ரசிகர்கள் விருப்பம் போல வாக்களிக்கலாம், மன்றப் பெயரை அரசியல்ரீதியாகயாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கை விட்டார்.
ஆனால் ரசிகர்களிடையே இந்த அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும்ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் முடிவை ஏற்க முடியாது, பாமகவுக்கு சரியான பாடம்புகட்ட இதுவே சரியான தருணம் என்று கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தரசிகர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஜினி இன்னும் 10 நாட்களில் தனது மறைவு நிலையிலிருந்து வெளியே வரவேண்டும். இல்லாவிட்டால் மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி தீவிர அரசியல்நடவடிக்கைளில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் இன்னொரு ரகசிய நடவடிக்கையிலும் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளதாகத்தெரிய வந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களைத் திரட்டிஒட்டுமொத்தமாக தேர்தலில் குதிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக மதுரை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், விழுப்புரம், சேலம்உள்ளிட்ட 15 மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காரைக்குடியில் வருகிற 26ம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகவும்இதில் கலந்து கொள்ளுமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
காரைக்குடியில் நடைபெறும் கூட்டத்தில், ரஜினி தனிக் கட்சி தொடங்க வேண்டும்.நேரடியாக களம் இறங்க வேண்டும். அது முடியாவிட்டால் ஏதாவது ஒரு கட்சியைஆதரிக்க வேண்டும் என்று முக்கியத் தீர்மானத்தை இக் கூட்டத்தில் நிறைவேற்றரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கையை ரஜினி ஏற்காவிட்டால் பாமக போட்டியிடும் 31தொகுதிகளிலும் மன்றங்களின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும், பாமகவின்தோல்விக்கு தீவிரமாக பாடுபடவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாமகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களைஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். இதனால்ரஜினி ரசிகர்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் புதிய பரபரப்புஏற்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களின் இந்தத் திடீர் ஆவேசத்திற்குப் பின்னணியில் ஏதேனும் அரசியல்கட்சி இருக்கலாமோ என்ற சந்தேகம் இருந்து வந்தது.
ரசிகர்களை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துள்ளதன் மூலம் அது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ரஜினியின் ஆதரவைப் பெற அதிமுக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்ததுகுறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு ராஜ்யசபா எம்பி பதவி தருவதாக லதா ரஜினிகாந்த்மூலமாக அதிமுக பேசியதாகவும், ஆனால், அதற்கு ரஜினி நோசொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications