111 இடங்களில் தனித்து போட்டி!: கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழகம்மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

தமிழகத்தில் 111 தொகுதிகளிலும், புதுவையில் 7 தொகுதிகளிலும் வேட்பாளர்கள்நிறுத்தப்படுவர் என கட்சித் தலைவர் கார்த்திக் அறிவித்துள்ளார்.

கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப்பிரிவு யாருடன் கூட்டணி சேருவது என்பதில் பெரும் குழப்பமடைந்தது.

திமுக தலைவர் கருணாநிதியை கார்த்திக்கும், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிஸ்வாஸும் போய்ச் சந்தித்ததால் ஜெயலலிதா அதிருப்தி அடைந்தார்.

மேலும், தனக்கு மிகவும் விசுவாசமான சந்தானத்தை புறக்கணித்து விட்டு கார்த்திக்செயல்படுவதையும் அவர் விரும்பவில்லை. இதனால் சந்தானத்தை மட்டும் கூப்பிட்டுஅவருக்கு ஒரு சீட் கொடுத்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுகவுடன்கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தார்.

இதை எதிர்பார்க்காத கார்த்திக், அதிமுகவிடமிருந்து தனக்கு அழைப்பு வரும் என்றுநீண்ட நாட்களாக காத்திருந்தார். அவருக்கு வயசு தான் கூடியதே தவிர, யாரும்கூப்பிடுவதாகத் தெரியவில்லை.

இந் நிலையில் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இந்தஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக்,

பல்வேறு சம்பவங்களுக்குப் பின்னர், பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் மத்தியகுழுவின் ஆலோசனைக்குப் பின்னர், மாநிலக் குழுவுடன் ஆலோசித்த பின்னர் ஒருமுடிவை எடுத்துள்ளோம். (அப்பாடா.. இப்பவாவது எடுத்தாரே)

அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் அகில இந்தியபார்வர்ட் பிளாக் கட்சி தனித்துப் போட்டியிடும்.

தமிழகத்தில் 111 தொகுதிகளிலும், புதுவையில் 7 தொகுதிகளிலும் போட்டியிடமுடிவு செய்துள்ளோம்.

எனது தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியே உண்மையானபார்வர்ட் பிளாக். சமுதாய மக்களுக்கு (முக்குலத்தோர்) சந்தானம் துரோகம் இழைத்துவிட்டார்.

அவர் கட்சியில் இப்போது உறுப்பினராக இல்லை. எனவே பார்வர்ட் பிளாக் என்றபெயரை அவர் பயன்படுத்த அதிகாரம் கிடையாது.

எங்களது தேர்தல் பிரசாரம் விரைவில் முறைப்படி தொடங்கும். தமிழகத்தில் புதியஅரசியல் சக்தியாக தேர்தலுக்குப் பிறகு பார்வர்ட் பிளாக் விளங்கும் என்றார் கார்த்திக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+