புதுவையில் பாமகவினர் பயங்கர வன்முறை!
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே நடந்த வன்னியர் சங்க வெள்ளி விழாவில் கலந்து கொள்ள வந்தபாமகவினர் குடிபோதையில் புதுவையில் பெரும் வன்முறையில் இறங்கினர்.
இதையடுத்து பாமகவினர் வந்த பேருந்து அடித்து நொறுக்கப்பட்டது. இந்த மோதலில்பெண் உள்பட சிலர் காயமடைந்தனர்.திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் வன்னியர் சங்கவெள்ளி விழா மாநாடு நடந்தது. இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த வன்னியர்சங்கத்தினர், பாமகவினர் ஏராளமான வாகனங்களில் கோனேரிக்குப்பம் வந்தனர்.
அதே போல கரூர் மாவட்டத்தில் இருந்தும் பாமகவினர் தனிப் பேருந்தில்திண்டிவனம் வந்தனர். வரும் வழியில் அவர்கள் பாண்டிச்சேரிக்குச் சென்றனர்.
அங்கு சில பாமகவினர் மது அருந்தினர். சிலர் சாப்பிடச் சென்றனர். மதுஅருந்தியவர்கள் பேருந்துக்குள் அமர்ந்து கொண்டு சாலையில் போனவர்களைவம்புக்கு இழுத்து தகராறு செய்துள்ளனர்.
சும்மா நடந்து சென்ற ஞானவேல் என்பவரையும் அவர்கள் தகராறுக்கு இழுத்துள்ளனர்.அடிக்கவும் பாய்ந்துள்ளனர். கோபமடைந்த அவர் தனது குடியிருப்புப் பகுதிக்குச்சென்று அங்கு ஆட்களைத் திரட்டிக் கொண்டு பாமகவினர் இருந்த இடத்துக்கு வந்தார்.
அவர்கள் பாமகவினரின் பேருந்தை அடித்து நொறுக்கினர். பேருந்துக்குள்இருந்தவர்களும் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.
பதிலுக்கு பாமகவினரும் தாக்குதலில் இறங்கினர்.
சாலையோரம் கிடந்த செங்கல், கற்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு இருதரப்பினரும் பயங்கரமாக மோதினர். இதில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
மஞ்சுளா என்ற பெண்ணுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அனைவரும் புதுவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த ரகளையால் புதுவை பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீஸார் பேருந்தைப் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட பாமக செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட 3 பாமகவினர் கைதுசெய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணையம் தடை:
இதற்கிடையே, கோனேரிக்குப்பத்தில் நடைபெறுவதாக இருந்த வன்னியர் சங்கஅறக்கட்டளையின் உத்தேச நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டடங்கள் திறப்பு விழாதேர்தல் ஆணையத்தின் தடையைத் தொடர்ந்து திறக்கப்படவில்லை.
வன்னியர் சங்க அறக்கட்டளை சார்பாக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி கட்டடங்கள்,உத்தேச நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடங்கள் வன்னியர் சங்க வெள்ளி விழாவின் போது திறந்து வைக்கப்படும்என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைப்பதாகஇருந்தது.
இந்த திறப்பு விழாவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதுதொடர்பாக கடலூர்மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரனுக்கு ஒரு பேக்ஸ் கடிதம் வந்தது.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அனுப்பியிரந்த அந்த கடிதத்தில்,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பயிற்சி வகுப்புக் கட்டடங்கள்,உத்தேச நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டடங்கள் திறப்பு விழாவுக்கு மட்டும் தேர்தல்ஆணையம் தடை விதித்துள்ளது.
மற்ற நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடத்தலாம் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கட்டடத் திறப்பு விழா மட்டும் நடைபெறவில்லை. வன்னியர் சங்கவெள்ளி விழா மற்றும் ராமதாஸுக்குப் பாராட்டு விழா ஆகியவை நடந்தன.
இதில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அவருக்கு டாக்டர் ராமதாஸும்,அவரது மகன் அன்புமணியும் வெள்ளி செங்கோல் வழங்கினர்.
நிகழ்ச்சியில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி, காடுவெட்டி குரு, புதுவை முதல்வர்ரங்கசாமி, ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications