நாகர்கோவிலில் நில நடுக்கம்: மக்கள் பீதி
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள சில கிராமங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.இதனால் வீட்டுச் சுவர்கள், தரைகளில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்துவீடுகளை விட்டு ஓடினர்,
நாகர்கோவில் அருகே உள்ள அஞ்சுத் தோப்பு, மயிலாடி, அழகப்பபுரம்,கனகப்பபுரம், சாமித் தோப்பு, மாடன்பிள்ளை தர்மம், தெங்கம்புதூர் உள்ளிட்டகிராமங்களில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) 7 மணியளவில் படபடவென்று வெடிவெடிப்பது போல சப்தம் கேட்டது.வெடிகுண்டு எதுவும் வெடித்து விட்டதோ என்று மக்கள் பீதியடைந்தனர். வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
லேசான அந்த நிலநடுக்கம் காரணமாக வீட்டுத் தரை மற்றும் சுவர்களில் பெரியஅளவில் விரிசல்கள் விழுந்தன. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடினர்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், இப் பகுதியில்மிகவும் லேசான நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ச் சேதம் மற்றும் பெரியஅளவில் பொருட் சேதம் ஏதும் இல்லை.
சில வினாடிககளுக்கு அதிர்வு இருந்துள்ளது. சுவர்களில் விரிசல் விழுந்துள்ளதுஎன்றார்.
நிலநடுக்கம் காரணமாக நாகர்கோவில் அருகே இன்னும் பதட்டம் குறையவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications