திமுக கூட்டணியில் நான் பட்ட காயங்கள்-வைகோ
சென்னை:
மதிமுக எம்.பிக்களையும், திமுக எம்.பிக்களாக சேர்த்துக் கணக்கு காட்டி, மத்தியஅமைச்சர் பதவியை வாங்கி, சோனியாவையும் பிரதரையும் ஏமாற்றியதோடு,மதிமுகவையும் அடமானம் வைத்து விட்டார் கருணாநிதி என்று வைகோ பரபரப்புகுற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள வைகோ, ஜெயா டிவிக்கு விரிவான பேட்டிஅளித்தார்.அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எனதுசகாக்களில் சிலருக்கு ஏற்பட்டது. அப்போது அமைச்சரவையில் மதிமுகவை சேர்ப்பதுகுறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிரதமரை சந்தித்தேன்.
அதற்கு அவர், உங்கள் கட்சிக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கிவிட்டதே என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் பிரதமரே என்று கேட்டேன்.உங்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து தனிக்கூட்டு அமைத்துள்ளதாகவும், திமுகவுக்குள்நீங்கள் உள் கூட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.
உங்களது கட்சி எம்.பிக்கள் நான்கு பேரையும் சேர்த்து திமுகவுக்கு மொத்தம் 20எம்.பிக்கள் என்று கூறித்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கியிருக்கிறதுஎன்றார்.
இது சோனியா காந்திக்குக் கூட தெரியுமே என்றார். இதையடுத்து சோனியா காந்திஅம்மையாரிடம் சென்று கேட்டேன். அவரும் பிரதமர் சொன்னதையே கூறினார்.
எங்கள் எம்.பிக்களையும் தங்கள் கட்சி எம்பிக்கள் என்று கணக்கு காட்டி, எங்களைஅடமானம் வைத்து அமைச்சர் பதவிகளை வாங்கியுள்ளது திமுக.
எங்களது எம்.பிக்களையும் சேர்த்துத்தான் மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கியவிஷயம் பற்றி திமுகவிடம் நான் இதுவரை பேசவில்லை.
நான் ஜீரணித்துக் கொண்டேன். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் எம்.பிக்களைக்காட்டி அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்களே, அப்படி என்றால் யார் யாருக்குதுரோகம் செய்திருக்கிறார்கள்?
நாங்களா துரோகம் செய்திருக்கிறோம்?
திமுகவினர் வாஜ்பாய் அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை இருந்து விட்டு ,அதை அனுபவித்துக் கொண்டே காங்கிரஸுடன் உறவுக்கு எல்லா ஏற்பாடுகளையும்செய்தார்கள்.
இதை எந்த இடத்திலும் நான் சொல்ல முடியும். அதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.
திறந்த புத்தகமாக எங்களது இயக்கத்தின் அணுகுமுறைகள் உள்ளன. இதைத்தான்பொதுக்குழுவிலும் பேசினேன். நீங்கள் இப்படி நடத்துவீர்களேயானால் அதிமுகவுடன்நாங்கள் கூட்டணி வைக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று கலைஞரிடம்சொன்னேன்.
மரசொலி மாறன் இறுதிச் சடங்கிலே பெசன்ட் நகரிலே கலந்து கொண்டு விட்டுவாஜ்பாய் அந்தப் பக்கம் விமானத்திலே ஏறிப் போகிறார். அவருக்கு டாட்டாகாண்பித்து விட்டு அதற்குப் பிறகு காங்கிரஸுடன் உடன்பாடு வைக்கப் போய்விட்டார்கள் திமுகவினர்.
மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்தபோதே தமிழ்நாட்டிலே உள்ள காங்கிரஸ்தலைவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு காங்கிரஸுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கலைஞர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதுநூற்றுக்கு நூறு உண்மை.
2003ம் ஆண்டு பிற்பகுதியிலேயே காங்கிரஸுடன் உடன்பாடு வைத்துக் கொள்வதுஎன்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இதற்குக் காரணம் தேடினார்கள். வெங்கையாநாயுடு சாதாரணமாக சொன்ன ஒரு விஷயத்தைப் பிடித்துக் கொண்டு, அதைக்காரணமா சொல்லி விட்டு நாங்கள் வெளியே போகிறோம் என்று சொன்னார்கள்.அதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.
கூட்டணியை விட்டு வெளியே போக 2 மாதங்களுக்கு முன்பே வைகோமுடிவெடுத்து விட்டார் என்று கலைஞர் சொல்கிறார். ஆனால் ஒன்றரைஆண்டுகளுக்கு முன்பே எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள்வந்து விட்டார்கள் என நான் சொல்கிறேன்.
2004 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தோழமைக் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் மதிமுகவின் பெயர் இடம்பெறவில்லை. எங்கள் கட்சியைவிட்டு விட்டீர்களே என்று கலைஞரிடம் கேட்டேன். அதற்கு சட்டமன்றத்திலே அங்கம்வகிக்கும் கட்சிகளின் கூட்டம் என்று பதில் சொன்னார்கள்.
இந்தக் கூட்டம் என்ன சட்டமன்றத்திலா நடக்கிறது. வெளியில் தானே பொதுஇடத்தில்தானே நடக்கிறது என்று நான் கேட்டேன். இதையடுத்து மறுநாள் எங்கள்கட்சியின் பெயரையும் சேர்த்து வெளியிட்டார்கள்.
எனது நடைப்பயணம் முடிந்து, 7 நாள் கழித்து, செப்டம்பர் 23ம் தேதி முரசொலியில்கலைஞர் ஒரு கடிதம் எழுதினார்.
மிகக் கடுமையாக எங்களை நிந்தித்து, இவர்கள் அறிவாலயத்தைக் கைப்பற்றநினைத்தவர்கள், துரோகிகள், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? வட்டமிடும்கழுகுகளாக, வாய் பிளந்து நிற்கும் ஓநாய்களாக, வளைத்து விட்ட மலைப்பாம்புகளாக, வசந்த சேனையின் வடிவமாக இவர்கள் வாள் நீட்டிப் பார்த்தவர்கள்,வலைக்குள் பதுங்கியிருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி அடைந்தேன். அன்றைக்கே எங்களைவெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. கலைஞரைசந்தித்து இதுகுறித்து கேட்டேன். ஏதோ கோபத்தில் எழுதி விட்டேன் என்று கூறினார்.
கோபப்படும் அளவுக்கு நான் ஒன்றும் செய்யவில்லையே என்றேன். நடைபயணத்தில்ஆலடி அருணா எப்படி வந்து பேசலாம் என்றார். நான் கூப்பிட்டு அவர் வரவில்லை,தானாக வந்தார் என்றேன்.
என்னை வருங்கால முதல்வர் என்று ஆலடி அருணா கூறியதில் அவர்களுக்குஉடன்பாடில்லை. ஆனால் இன்றைக்கு வருங்கால முதல்வர் என்று கலைஞரின் மகன்(ஸ்டாலின்) குறித்து தினம் தினம் போஸ்டர் அடிக்கிறார்கள். விளம்பரம்பண்ணுகிறார்கள். இதற்கு கருணாநிதி எந்தவிதமான விளக்கம் சொல்ல முடியாது.
1972ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை, டாக்டர் கலைஞர் தனது குடும்ப நலனுக்காகதூக்கி எறிந்தார், என்ன காரணத்திற்காக? குடும்ப நலம், சுய நலம்.
அதே போலத்தான் 1993ல் எந்த இயக்கத்திற்காக என் வாழ்நாளை நான் முழுமையாகஅர்ப்பணித்தேனோ, என் வாழ்வின் ஜீவனும், சுவாசம் எல்லாம் என நான் எதைஏற்றுக் கொண்டேனோ, அண்ணா உருவாக்கிய திமுக என்று இருந்த என்னைகொலைகாரன், சதிகாரன் என்று பழிசுமத்தி, தூக்கி வெளியே எறிந்தார்கள்.
கட்சித் தலைமையை கொலை செய்ய சதித் திட்டத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றுகுற்றம் சாட்டி கட்சியை விட்டு நீக்கியது எனக்குத் தெரிய உலகில் வேறு எங்குமேநடந்திருக்காது.
எவ்வளவு பெரிய மனக்காயங்களுக்கு நான் ஆளாகியிருப்பேன்?.
இவ்வாறு பல விஷயங்கள் குறித்து மிக விரிவான பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைமை தன்னை எப்படியெல்லாம் புறக்கணித்தது, சன் டிவி தன்னைஎப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்தது என்பதை எல்லாம் மிக விளக்கமாகவேகூறிய வைகோ, பொடா குறித்த கேள்விக்கு மட்டும், அது ஊழ் வினை.. காலத்தின்தீர்ப்பு.. அது ஒரு அரசியல் நடவடிக்கை என்று பதிலளித்துவிட்டு நழுவிக் கொண்டார்.
அதே போல தனது பேட்டி முழுக்கவும் புரட்சித் தலைவி.. டாக்டர்.. என முதல்வர்ஜெயலலிதாவை அச்சு அசல் அதிமுககாரர் மாதிரியே பாராட்டினார்.
பேட்டியைப் பார்த்தபோது ஒரு மாசத்துக்கு முன்ன இருந்த அந்த வைகோவா இதுஎன்ற கேள்வியும் ஆச்சரியமும் தான் மிஞ்சியது.












Click it and Unblock the Notifications