வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்
சென்னை:
வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்கு ஒரு வாரம் முன்பு வரை வாக்காளர்பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அறிவித்துள்ளார்.
7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர்செய்தியாளர்களிடம் குப்தா பேசுகையில்,வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெயர்களை சேர்க்க மேலும்ஒரு அவகாசம் தரப்படுகிறது. அதாவது, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்குஒருவாரம் முன்பு வரை பெயர்களை சேர்க்கலாம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக மனுக்களைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.சரியான தகவல்கள் உள்ள மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.34 கோடி. ஆண் வாக்காளர்களின்எண்ணிக்கை 2.30 கோடியாகும்.
கோவை மாவட்டம்தான் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாகவிளங்குகிறது. அங்கு 34.41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்துதிருவள்ளூர் மாவட்டத்தில் 27.34 லட்சம் வாக்காளர்களும், சென்னையில் 27.33லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
மார்ச் 19ம் தேதி வரை 39 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாளஅட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 1.60 கோடி வாக்காளர்களுக்குஅடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. ஏப்ரல் 20ம் தேதி வரைபுகைப்பட அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படும்.
அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தையல் இயந்திரங்கள்கொடுத்ததாக வந்துள்ள புகார் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர்விஜயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
அவரது அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார் நரேஷ் குப்தா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications