வைகோ மீது தலைமறைவு கராத்தே அட்டாக்!
சென்னை:
தனது தாயின் பேச்சை மீறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தாய் சொல்லைத் தட்டியதனயன் என்ற அவப்பெயரை சம்பாதித்துவிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோஎன்று தலைமறைவு சென்னை மாகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன்கூறியுள்ளார்.
கடந்த பல மாதங்களாகவே தலைமறைவாக இருக்கும் கராத்தே தியாகராஜன் தற்போதுஇந்தியாவுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் அவர்பதுங்கியிருப்பதாக தெரிகிறது.இந் நிலையில் டெல்லியிலிருந்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் நேரத்தில் அரசியல் அணி மாற்றம் என்பது சாதாரண விஷயம்தான்.திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது, குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுகிறது என்றுகூறும் வைகோ, தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் ஈடுபட்டிருப்பதை ஏளனம்செய்துள்ளார்.
கட்சியில் தலைவர்கள் இல்லையா, தியாகிகள் இல்லையா என்றும் கேள்விக் கணைகளைத்தொடுத்துள்ளார். மத்திய அமைச்சராக திறம்பட செயல்பட்டு, பலரது பாராட்டுக்களையும்,பிரதமரே மெச்சும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாநிதி மாறன்.
அவரது சாதனைகளை உலகமே பாராட்டிக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரு ரூபாயில் பேசலாம் என்ற மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியைசெய்துள்ளார். அப்படிப்பட்டுவரை,
திமுகவின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று புகழப்பட்ட முரசொலிமாறனின் மகன் என்று கூட பாராமல் வைகோ சிறுமைப்படுத்தி பார்த்தது நியாயத்திற்குஒவ்வாத செயல்.
தயாநிதி மாறன் இன்றைக்கு அனைவராலும் மதிக்கப்படுகிற மனிதராக திகழ்கிறார்.துடிப்புள்ள இளைஞராக அவர் பணியாற்றி வருகிறார். இன்றைக்கு பொது வாழ்வில்நேர்மை, தூய்மை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் வைகோவின் மதிமுக கடந்தவாஜ்பாய் அரசில் இடம் பெற்றிருந்தபோது என்ன நடந்தது?
அமைச்சராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் மீது பலவித ஊழல் புகார்கள் வந்தன. அவரதுஉதவியாளர் சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கினார். இதனால் செஞ்சி ராமச்சந்திரன்பதவி விலகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த உதவியாளர் வைகோவின் உறவினர்என்று கூட கூறப்பட்டது.
கடந்த கால சம்பவங்களை வசதியாக மறந்து விட்டு இன்று வைகோ பேட்டியளிக்கிறார்.தேர்தல் விதி மீறல்களுக்காக சென்னை காவல்துறை ஆணையர் நடராஜ் மாற்றப்பட்டதைக்கண்டித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
2002ம் ஆண்டு சைதாப்பேட்டை இடைத் தேர்தல் நடந்தபோது தேர்தல் விதிமுறைமீறல்களுக்காக அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த சம்பத் தேர்தல்ஆணையத்தால் அதிரடியாக மாற்றப்பட்டாரே, அப்போது வாய் திறக்காதது ஏன்?
இன்றைக்கு தாய் சொல்லைத் தட்டிய தனயன் என்ற அவப்பெயரெடுத்து விட்டாலும கூட,வைகோ தனது தாயார் மீது அளவற்ற பாசம் உள்ளவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதேபோல் நானும் எனது தாய் மீது மிகுந்த பாசம் உள்ளவன். ஆனால் இறந்து போனஎனது தாய்க்குக் கொள்ளி வைக்கக் கூட முடியாத சூழ்நிலைக்கு ஜெயலலிதா அரசால்தள்ளப்பட்டேன் என்று குமுறியுள்ளார் கராத்தே.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் காங்கிரஸில் சேர தீவிரமாக முயன்று வந்தார்கராத்தே. ஆனால் அவரை சேர்க்க காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால்அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இந் நிலையில் தான் திடீரென தயாநிதி மாறனுக்கு ஜிங்ங்..சக் அடித்துள்ளார். இதன் மூலம்திமுகவுக்குத் தாவ அவர் அடி போடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications