அதிமுக சிக்கல்: மதிமுக-விசி கேட்கும் தொகுதிகள்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மதிமுகவுக்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் அதிமுககூட்டணில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிமுகவில் 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில், மங்களூர், காட்டுமன்னார்கோவில், சீர்காழி, சமயநல்லூர், தலைவாசல், அவினாசி, வரகூர், நன்னிலம்,அரக்கோணம், அச்சிறுப்பாக்கம், வானூர், அரூர் ஆகிய 12 ரிசர்வ் தொகுதிகளில் இருந்தும்,
நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, மேல்மலையனூர், சங்கராபுரம் ஆகிய பொதுத் தொகுதிகளில்இருந்தும் தங்களுக்கு உரிய 9 தொகுதிகளை ஒதுக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவன் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், பாமக போட்டியிடும் தொகுதிகளில் இருந்தே வி.சிக்கு அதிக தொகுதிகளை அதிமுகஒதுக்கியுள்ளதாகவும், அதிகமான பொதுத் தொகுதிகளை ஒதுக்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 2 முறை அதிமுக தரப்பில் கூப்பிட்டும் கூட திருமாபோகவில்லை.
இந் நிலையில் கொஞ்சம் விட்டுத் தர அதிமுக முன் வந்ததையடுத்து விடுதலைச் சிறுத்தைகள்பிரதிநிதிகள் அதிமுக குழுவுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளனர்.ஆனாலும் இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு முடியவில்லை.
மதிமுக விவகாரம்:
மதிமுக தொகுதிகள் விஷயத்திலும் அதே இழுபறி நீடிக்கிறது.
இந்தக் கட்சிக்கு 35 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதிமுக பொதுச் செயலாளர்கேட்டுள்ள தொகுதிகள் விவரம்:
திருச்செங்கோடு (பொருளாளர் கண்ணப்பனுக்கு), செஞ்சி, ஒரத்தநாடு(எல்.கணேசனின் மகனுக்கு), துறைமுகம், தாம்பரம், திருப்போரூர், திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர்,
கோவை மேற்கு, திருச்சி 1, திருவரங்கம், சேலம் 1, பல்லடம், கம்பம், திருப்பத்தூர்(சிவகங்கை மாவட்டம்), சங்கரன்கோவில், சேடப்பட்டி, நாகர்கோவில் (நாஞ்சில்சம்பத்துக்கு), சிவகாசி (வைகோவுக்கு), அருப்புக்கோட்டை, சாத்தான்குளம், குளச்சல்,
மொடக்குறிச்சி, புவனகிரி, அரவக்குறிச்சி, மேலூர், திருமங்கலம், மதுரை கிழக்கு,சோழவந்தான், திருப்பரங்குன்றம், பட்டுக்கோட்டை, திண்டுக்கல், மருங்காபுரி,அரியலூர், திருப்பூர், புதுக்கோட்டை, எழும்பூர், ஈரோடு, கடையநல்லூர்.
இந்த 41 தொகுதிகளில் இருந்து 35 தொகுதிகளை ஒதுக்கக் கோரியுள்ளார் வைகோ.ஆனால், இதில் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வந்துள்ள அதிமுக பிறதொகுதிகள் விஷயத்தில் தொடர்ந்து பேசி வருகிறது.
வைகோ கேட்கும் தொகுதிகள் பெரும்பாலும் கிக்ைகாது என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்அதிமுக தேர்வுக் குழுவை சந்தித்து விவாதித்தார். அவர் இரட்டை இலை சின்னத்தில்ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கான தொகுதி அடையாளம்காணப்பட்டு விட்டதாக தெரிகிறது.
இன்று குட்டிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அதிமுக தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து, கூடுதல் சீட்டுக்களுக்காக இலவு காத்தகிளியாகக் காத்திருக்கும் திண்டிவனம் ராமமூர்த்தியையும் இன்று அதிமுக அழைத்துப்பேசும் என்று தெரிகிறது.
இவர் 42 சீட்கள் கேட்டார். ஒரே ஒரு சீட் தருகிறோம்.. என்று ஆரம்பித்த அதிமுகஅதிகபட்சம் 3 தான் என்று கூறிவிட்டது.
அதே போல ஒரே ஒரு சீட்டுக்கு ஒப்புக் கொண்டால் டி.ராஜேந்தரையும் பேச வருமாறுஅதிமுக அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இவர் மூணு நல்லா சீட்டா பார்த்து குடுங்கஎன்று கேட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications