நடராஜ் மாற்றம் சரியே: நரேஷ்குப்தா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இடமாற்றம் செய்யப்பட்டதுசரியான நடவடிக்கைதான் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாசென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பெண்களின் ரோல் மாடல் என்றுபாராட்டிப் பேசியதற்காக நடராஜ் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து மாஜி டிஜிபிக்கள் பரமகுரு, தேவாரம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், 23ம்தேதி வரை நடராஜ் இடமாற்ற உத்தரவு அமல்படுத்தப்படாது என்று உறுதியளித்தார்.இதையடுத்து இன்றைக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ் குப்தா உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவருக்குக் கீழ் பணியாற்றும்காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தக் குறிப்பிட்ட அதிகாரியை மாற்றக் கூடாது, அவரே பதவியில் தொடர்ந்துஇருக்க வேண்டும் என தமிழக அரசு பிடிவாதமாக கேட்பது ஏன்? இதிலிருந்தே,தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை சரியானதே என்பது உறுதியாகும்.

எனவே ஆணையர் இடமாற்றத்தை எதிர்க்கும் மனுக்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் குப்தா. வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்குவருகிறது.

ஆணையர்கள் தமிழகம் வருகை:

இதற்கிடையே தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக,தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் மற்றும் ஆணையர்கள் கோபாலசாமி,நவீன் சாவ்லா ஆகிய 3 பேரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்கள்.

3 ஆணையர்களும் வரும் 27ம் தேதி புதுவை செல்கிறார்கள். அங்கு தேர்தல்ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திவிட்டு, 28ம் தேதிசென்னை வருகிறார்கள்.

சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழகத்தலைமைத் தேர்தல் அதிகாரி, உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

மேலும், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+