கார்த்திக்கை எதிர்த்து சந்தானம் போட்டி?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நடிகர் கார்த்திக் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப்போட்டியிடத் தயாராக இருப்பதாக பார்வர்ட் பிளாக் கட்சியின் அதிருப்தி பிரிவுத்தலைவர் சந்தானம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தனியாக போட்டியிடுவது என்ற முடிவை எடுத்ததன் மூலம் சமூக மக்களுக்கு கார்த்திக்துரோகம் இழைத்துள்ளார். நான் அவரிடம் பலமுறை பேசினேன். ஆனால் எனதுபேச்சை அவர் ஒருபோதும் கேட்கவில்லை.

அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் மூலம் தமிழக பார்வர்ட் பிளாக்கைஒழிக்க கருணாநிதி போட்ட திட்டத்தின் பின்னணியாகத்தான் இதை நான் கருதுகிறேன்.கருணாநிதியின் சிபாரிசின் பேரில்தான் கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சியில்சேர்க்கப்பட்டார்.

முக்குலத்தோர் சமூக வாக்குகள் காலம் காலமாக அதிமுகவுக்குத்தான். அதிமுகஅரசின் அரவணைப்பில் அவர்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

எனவே கார்த்திக்கால் அதிமுகவுக்கோ அல்லது எங்களுக்கோ எந்தப் பாதிப்பும்கிடையாது.

அதிமுகவுடன் கூட்டணி அமைய இருந்த நல்ல வாய்ப்பை கார்த்திக் கெடுத்துகொண்டு விட்டார். தவறி விட்டார். (அவரு எங்க தவற விட்டார்.. அவர் தான்அதிமுக கூட்டணிக்காக அலைந்தாரே)

நடிகர்களுக்கு கூட்டம் கூடுவது புதிதல்ல. விஜயகாந்த்துக்குக் கூடத்தான் கூட்டம்வருகிறது. அதேபோலத்தான் கார்த்திக் கூட்டத்துக்கும் நிறையப் பேர் வருகிறார்கள்.ஆனால் அவையெல்லாம் ஓட்டாக மாறும் என்று கூற முடியாது.

இப்போது வேடிக்கை பார்த்து விட்டு ஓட்டுப் போடும்போது அவர்கள் சார்ந்துள்ளகட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு விட்டுப்போய் விடுவார்கள்.

நான் யாரை எதிர்த்தும் போட்டியிடத் தயாராக உள்ளேன். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். கார்த்திக்கை எதிர்த்து நிற்க வேண்டி வந்தால் அதற்கும் தயார்தான். சிங்கம்சின்னத்திலேயே நிற்க நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்றார் சந்தானம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+