விஜயகாந்த்தெல்லாம்... கருணாநிதி சலிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜயகாந்த் போன்றவர்கள் குறித்தெல்லாம் நான் அலட்டிக் கொள்வதே இல்லை,அவர்கள் பற்றி நினைத்துக் கூட பார்க்க எனக்கு நேரமில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாகமுரசொலியில் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு கருணாநிதிஅளித்துள்ள பதிலும்:

கேள்வி: ஒருவர் (அதாவது விஜயகாந்த்) திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்என்று கூறி வருகிறார். யாருடனும் கூட்டணி கிடையாது என்று கூறி வந்தார்.இப்போது, ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி என்கிறார். ஆட்சியில் பங்குகொடுத்தால் ஊழல் மாறி விடுமா?

கருணாநிதி பதில்: நான் சிலரது செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கவோ, கருத்துதெரிவிக்கவோ விரும்பவில்லை என்று பலமுறை கூறியபோதிலும், திரும்பத் திரும்பஅவர்களைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்கப்படுகிறது.

நீங்கள் யாரைப் பற்றிக் கேட்டு இருக்கிறீர்களோ, அவர் மதுரையில் முதன் முதலில்கட்சி தொடங்கியபோது அந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து அனுப்பியவன் நான்.அவர்களுக்கும் பேச உரிமை உண்டு.

தற்போது அவர்கள் என்னதான் என்னைப் பற்றி தாக்கிப் பேசினாலும், கடந்தகாலத்தில் அவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்து பேசிய வார்த்தைகளை நினைத்துக்கொண்டு இப்போது பேசுவதைப் பற்றி நான் அதிகமாக அலட்டிக் கொள்வது இல்லை.அதற்கான நேரமும் எனக்கு இப்போது இல்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

முதலில் கூட்டணியே இல்லை என்று கூறிய விஜய்காந்த், இப்போது ஆட்சியில் பங்குகொடுத்தால் கூட்டணி என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் இறங்கி வருவதாகவும்அதிமுக கூட்டணியில் இணைவார் என்றும் திமுக கருதுகிறது.

அதே போல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகள் குறித்தகேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்கினார்கள்.ஆனால் அவை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது போலத் தெரியவில்லை. இதைப்பார்க்கும்போது கெட்டிக்காரன் புளுகு 8 நாளில் தெரியும் என்ற பழமொழிதான்நினைவுக்கு வருகிறது.

சென்னை மாநகர ஆணையர் நடராஜ் இடமாற்றம் தொடர்பாக தேர்தல்ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஒருவர் (இரா.செழியன்) கூறியுள்ளாரேஎன்ற கேள்விக்கு ஆதாரம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைப்பார்களா என்றுகேட்டுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+