தேர்தலில் குதிக்கும் சுப. இளவரசன் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் விடுதலைப் படைத் தலைவர்சுப.இளவரசனின் மனைவி கவியரசி, வரும் சட்டசபைத் தேர்தலில் ஆண்டிமடம்தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையின் தலைவராக இருப்பவர்சுப.இளவரசன். இவர் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இப்போது இவர்

சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இளவரசனின் மனைவி கவியரசி, தனது மகனுடன் சென்னையில்செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், தமிழர் நீதிக் கட்சி சார்பாக நானோ அல்லது எனது கணவரோஆண்டிமடம் தொகுதியில் போட்டியிடவுள்ளோம்.

எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. பெரம்பலூர் மற்றும் விழுப்புரம்மாவட்டங்களில் எங்களுக்கு நல்ல இருக்கிறது.

மக்களுக்காகப் போராடியவர் எனது கணவர். அப்படிப்பட்டவரை தீவிரவாதி என்றுசொல்லி போலீஸார் உள்ளே தள்ளி விட்டார்கள். எங்களுக்கு யாரும் எதிரிகள்இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள்தான்.

தேர்தலில் போட்டியிட வட்பு மனு தாக்கல் செய்ய எனது கணவர் பரோலில்வெளியே வந்தால் அவருக்கு போலீஸார் தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும்என்றார் கவியரசி.

வழக்கு பூந்தமல்லிக்கு மாற்றம்:
இந் நிலையில் சுப. இளவரசன் மீதான ஒரு வழக்கை வெடிகுண்டு வழக்குகளைவிசாரிக்கும் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

வீரப்பன் மற்றும் அவனது கும்பலுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களைவினியோகித்ததாக கூறி சுப. இளவரசன் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் மீதுகொளத்தூர் போலீஸார், மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை அங்கிருந்து மாற்றக் கோரி இளவரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் என் மீதுநடந்து வரும் வழக்கு விசாரணை வேண்டும் என்றே காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

வெடிகுண்டுகள் தொடர்பான வழக்குகளை கோவை அல்லது பூந்தமல்லி சிறப்புநீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே என் மீதான வழக்கையும் இந்த இரு நீதிமன்றங்களில் ஏதாவது ஒன்றுக்குமாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெயபால், சுப. இளவரசன் மீதான வழக்கைபூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+