தனி கோர்ட்டில் 15 பெங்களூர் தமிழர்கள் வழக்கு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள குணசீலன்,பேராசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 15 தமிழர்கள் தொடர்பான வழக்கை சிறப்புநீதிமன்றத்தில் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் பிரிவினைவாத செயல்களில்ஈடுபட்டதாக கூறி பெங்களூரைச் சேர்ந்த குணா என்ற குணசீலன், பேராசிரியர்நெடுஞ்செழியன் உள்ளிட்ட 15 தமிழர்களை கர்நாடக போலீஸார் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.இவர்கள் மீது பெங்களூர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைநடந்து வருகிறது.
இந்த வழக்குகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பரப்பன அக்ரஹாராவில் உள்ளமத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி கர்நாடகஅரசின் சார்பில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், 15 பேர் மீதான வழக்குகளையும்பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications