தமிழக ரயில்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்
சென்னை:
வட மாநில கொள்ளையர்களின் அட்டகாசம் தமிழக ரயில்களில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
வட மாநிலங்களில் ரயில்களில் மயக்க பிஸ்கட், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பணம், நகைகளைகொள்ளையடிக்கும் கும்பல் தற்போது தமிழகத்திலும் தன் கைவரிசையை காட்ட துவங்கியுள்ளது.தமிழகத்தின் எல்லைப்பகுதியில் நேற்று மட்டும் இது போல 2 சம்பவங்கள் நடத்திருப்பது ரயில் பயணிகளிடையேஅச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குர்லாவிலிருந்து ரேணி குண்டா, செங்கல்பட்டு வழியாக மதுரை செல்லும் எதஸ்பிரசில் நேற்று கேளராவைசேர்ந்த முன்னாள் ராணு வீரர் அனந்தராமன், அவரது மனைவி அன்னபூரணி ஈஸ்வரி.
மற்றொரு குடும்பம் சந்திரன், அவரது மனைவி அன்னபூரணி ஆகியோர் பயணம் செய்தனர். அனந்தராமன்புனேயில் இருந்து ராமேஸ்வரத்திறகும், .சந்திரன் திருச்சிக்கு பயணம் செய்தனர்.
அவர்கள் அருகில் பயணம் செய்த வட மாநில வாலிபர்களான ராஜேஷ், ரமேஷ். ராஜேஷ் சிங் ஆகியோர்நன்றாக பேசி பழகி வந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவை கடந்த போது வாலிபர்கள், தமிழக பயணிகளிடம்குளிர்பானத்தை கொடுத்தனர்.
பயணிகள் நான்கு பேரும் எதுவம் சொல்லமால் குளிர்பானத்தை வாங்கி குடித்தனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் அரக்கோணம் அருகே டிக்கெட் பரிசோதகர் பயணிகள் நான்கு பேரும் மயங்கிகிடப்பதை பார்த்தார். உடனடியாக அவர்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மயக்கம் தெளித்து அவர்கள் பேசியபோதுதான் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துஏமாற்றப்பட்டிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இரு பெண்களில் கழுத்தில் கிடந்த தாலி, செயின், தங்கவளையல், பிரேஸ்லெட் ஆகியவையும், ரொக்க பணம் ரூ. 9 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் அடித்து சென்றுவிட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 3 லட்சமாகும்.
இதே போல ஐதராபத்திலிருந்து திருவனந்தபுரம் சென்ற ரயிலில் 2 பேர் மயங்கி கிடந்தனர்.
அவர்களில் ஒருவர் கோவையும், மற்றொருவர் எண்ணாகுளம் செல்லக்கூடியவர். இவர்களிடமும் மயக்க மருந்துகொடுத்து கொள்ளையர்கள் பணத்தை அடித்து சென்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரிலிருந்து பாட்னா சென்ற ரயிலில் 8 வாலிபர்களிடம் மயக்க பிஸ்கட்கொடுத்து ஒரு கொள்ளை கும்பல் பணத்தை அடித்து சென்றது குறிப்பிடதக்கது.
வடமாநிலங்களில் மட்டுமே தங்கள் கைவரிசையை காட்டி கொள்ளை கும்பல் தற்போது தமிழகத்தின் தன்கைவரிசையை காட்டி துவங்கியுள்ளது ரயில் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த ரயில் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட முடியும்.












Click it and Unblock the Notifications