சிறுசேரி: ரூ1200 கோடி ஊழல்?-திமுக வழக்கு
சென்னை:
சென்னை அருகே சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அரசுக்குச்சொந்தமான நிலத்தை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு முறைகேடாக விற்றதில் ரூ.1,200வரை மோசடி நடந்திருப்பதாகக் கூறி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிசென்னை உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அரசு நிலத்தை சிங்கப்பூரைச்சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மிகவும் அடிமட்டமான விலைக்கு தமிழகஅரசு விற்றது.ஏக்கர் ரூ. 2 கோடி வரை விலை போகும் இப் பகுதியில் அதை வெறும் ரூ. 15லட்சத்துக்கு விற்றது.
இதனால் அரசுக்கு ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த நிலபேரத்தில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும் கூறி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஆற்காடு வீராசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குதொடர்பாக சிபிஐ விசாரணையையும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்னொரு டான்சி விவகாரமாக மாறி விடுமோ என்று பயந்த தமிழகஅரசு சிறுசேரி நில ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிங்கப்பூர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் 2 ரிட்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் தம்மையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளக் கோரி ஆற்காடுவீராசாமி இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில் இன்றுஇன்னொரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.
அதில், அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பழைய மகாபலிபுரம்சாலையில் ஏலம் விடப்பட்ட நிலம் ஏக்கருக்கு ரூ.11.40 கோடிக்கு விற்பனைஆகியுள்ளது.
அப்படிப் பார்த்தால், சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சிறுசேரி சிப்காட் நிலத்தை விற்றவகையில் அரசுக்கு ரூ.1,200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.
எனவே இந்த நில பேரத்தில் மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் எனத்தெரிகிறது. இதனால் சிறுசேரி நில விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications