திமுகவுக்கு முஸ்லீம்-கிருஸ்துவர் கூட்டமைப்பு ஆதரவு
சென்னை:
தமிழ்நாடு, புதுவை சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சட்டசபைத் தேர்தலில்திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் (இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் அடங்கிய அமைப்பு) செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.அதில் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.அதில், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தலைவர் தாவூத் மியா கான் (காயிதே மில்லத் பேரன்), அகில இந்திய மில்லிகவுன்சில் பொதுச் செயலாளர் இனாயத்துல்லா,
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பிரகாஷ், மறுமலர்ச்சி முஸ்லீம்லீக் தலைவர் உமர் பாரூக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத்தேர்தலில் சிறுபான்மையினர் கூட்டமைப்பு நடுநலை வகிக்க வேண்டும். அரசியல்சார்பு நிலையை எடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திகவுக்கு ஆதரவுதெரிவிப்போம் என்று அவர்கள் கூறினர். இரு தரப்பு விவாதங்களுக்குப் பின்னர்திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு நடுநலை வகிக்க வேண்டும் என்று தெரிவித்தவர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிறகு செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் தலைவர் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ,பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் பேசுகையில்,
2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும்அதிமுக அரசு நிறைவேற்றத் தவறி விட்டது. முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடுதருவதாக கூறிய அதிமுக தற்போது அதை மறந்து விட்டது.
மதமாற்றத் தடைச் சட்டம் இப்போது நீக்கப்பட்டு விட்டாலும் கூட அந்தச் சட்டம்சிறுபான்மை மக்களை குறி வைத்துக் கொண்டு வரப்பட்டது என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. அது எங்களை மிகவும் பாதித்து விட்டது.
அதேசமயம், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசு சிறுபான்மை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களைநிறைவேற்றி வருகிறது. முஸ்லீம்களுக்கு ராணுவத்தில் இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதை நாங்கள் வரவேற்கிறோம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஐக்கியமுற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இணைந்து தமிழகத்தில்உருவாக்கியுள்ள திமுக கூட்டணியை வரும் தேர்தலில் ஆதரிக்க முடிவுசெய்துள்ளோம் என்றனர்.
இந்த அமைப்பின் நிர்வாகிகள் 33 பேரில் 29 பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்தனர். 4 பேர் நடுநிலை வகித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications