தோற்கும் தொகுதிகள்-காங்கிரஸார் போராட்டம்
சென்னை:
திமுகவிடம் காங்கிரஸ் கட்சியை அடகு வைத்து, தோற்கும் தொகுதிகளாக வாங்கிக்கொடுத்துள்ளார் வீரப்ப மொய்லி என்று கூறி அவரைக் கண்டித்து சென்னையில்காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உருவப் படத்தை தீ வைத்துக் கொளுத்திபோராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சிக்கான 48 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. இந்தத் தொகுதிகள்எவை என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும். இந் நிலையில் காங்கிரஸ்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.அதன்படி காங்கிரஸ் கட்சி பாரம்பரியமாக ஜெயித்து வரும் பல தொகுதிகள்இம்முறை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸில் ஒருதரப்பினர் ஆத்திரமடைந்துள்ளனர்.
இன்று காலை சென்னையில் கூடிய இவர்கள் வீரப்ப மொய்லியின் உருவப் படத்தை தீவைத்துக் கொளுத்தினர். அவர்கள் கூறுகையில்,
திமுகவிடம் காங்கிரஸை வீரப்ப மொய்லி அடகு வைத்து விட்டார். தோற்கும்தொகுதிகளாக வாங்கிக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக ஜெயித்துவரும் தொகுதிகளைக் கூட இந்த முறை ஒதுக்கவில்லை என்று அறிகிறோம்.
திமுகவுக்கு சாதகமாகப் பேசி அவர்கள் கொடுத்த தொகுதிகளை மொய்லி வாங்கிக்கொடுத்துள்ளார். இதை ஏற்க முடியாது. உடனடியாக இந்த தொகுதி ஒதுக்கீட்டுஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஜெயித்து வரும் தொகுதிகளை உடனடியாக வாங்கிக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக நாங்கள் வேலைசெய்ய வேண்டி வரும் என்று அவர்கள் கூறினர்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகசத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் கட் அவுட்கள், பேனர்களைகட்சி மேலிடம் நேற்றே அகற்றி விட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications