தொடரும் பிளஸ் டூ தேர்வு குளறுபடிகள்!
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் குழப்பம் தொடருகிறது. கடுமையான கேள்வித் தாள்களைத்தொடர்ந்து தற்போது மதிப்பெண்களையே குறைத்து கேள்வித்தாள் வெளியாகிமாணவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிளஸ் டூ தேர்வில் ஆரம்பம் முதலே, மாணவ, மாணவியர்களுக்கு பெரும் குழப்பம்ஏற்பட்டுள்ளது. இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் மிகவும் கடினமாக இருந்து மாணவ, மாணவியரை சிரமப்படுத்தியது.இந்தப் பாடங்களுக்கு கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டால்தான் மாணவ,மாணவியர் தோல்வியிலிருந்து தப்ப முடியும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
இந் நிலையில், தொழிற்பாடப் பிரிவுகளுக்கான தேர்வு புதன்கிழமை நடந்தது. அதில்வானொலி, தொலைக்காட்சி பாடத்திற்கான கேள்வித்தாளை வாங்கிப் பார்த்தமாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில், மொத்த மதிப்பெண்கள் 200 என்பதற்குப் பதில் 150 என்றுபிரசுரமாகியிருந்தது. இதனால் மாணவர்கள் குழம்பினர்.
ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்தேர்வை 150 மதிப்பெண்ககளுக்கு நடத்துவது ஏன் என்று தெரியாமல் மாணவர்கள்அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
தேர்வுக்கு வந்திருந்த கண்காணிப்பாளர்களிடம் இதுகுறித்து மாணவர்கள் கேட்டதற்கு,கேள்வித்தாள் தவறாக வெளியாகியுள்ளது. எனவே இதில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.
இருப்பதை வைத்து தேர்வு எழுதுங்கள், அரசு ஏதாவது அறிவிப்பு வெளியிடும் என்றுமாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.
50 மார்க் என்னாச்சு என்ற குழப்பத்துடனேயே மாணவ, மாணவியர் தேர்வை எழுதிமுடித்து கவலையுடன் வெளியே வந்துள்ளனர்.
கேள்வித்தாள் தயாரிப்பில் மெத்தனம் காட்டியதும், கல்வித்துறையினரின் அலட்சியப்போக்குமே இதற்கு காரணம் என தொழிற்பாடப் பிரிவு ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு உடனடியாக இதுகுறித்து மாற்று அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே மாணவ,மாணவியர் நிம்மதி அடைய முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications