ஜெயலலிதாவை சந்திக்கிறார் ரஜினிகாந்த்?
சென்னை:
சட்டசபைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் ரஜினிகாந்த்விரைவில் சந்திக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
சமீப காலமாக ஒவ்வொரு தேர்தலின்போதும், ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற கேள்விஎழுவதும், அவர் யாருக்காவது வாய்ஸ் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது.ஆனால் முதல் முறையாக இந்தத் தேர்தலில் தனது வாய்ஸ் யாருக்கும் கிடையாதுஎன்று ரஜினி அறிவித்து விட்டார்.இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இவர்அரசியலுக்கு வருவார் என்று நம்பி கரைவேட்டிக் கனவுகளோடு அலைந்த அரசியல்ஆர்வம் மிக்க ரசிகர்கள் வெறுத்துப் போய்விட்டனர்.
இந்த வெறுப்பை தனக்குச் சாதமாக அதிமுக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.வழக்கம்போல் உளவுப் பிரிவினரை களமிறக்கிவிட்டு ரஜினி மன்றத்தின் மாவட்டநிர்வாகிகளை கவனித்தும், தூபம் போட்டும் அதிமுகவுக்கு ஆதரவாக இழுக்கஆரம்பித்துள்ளனர்.
இதன் விளைவுகளும் வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டன. கோவையில் ரஜினியைபகிரங்கமாக எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சில பகுதி ரசிகர் மன்றத்தினர் 10நாள் கெடு விதித்து ரஜினிக்கு மிரட்டலும் விடுத்துள்ளன.
பாண்டிச்சேரி மற்றும் சில பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் ரஜினி மன்றத்துக்கு முழுக்குபோட்டுவிட்டு அதிமுகவில் சேர முயன்று வருகின்றனர்.
ரசிகர்கள் இவ்வாறு தன்னை விட்டு விலகுவது தனது சிவாஜி படத்துக்கு எதிராகப்போய்விடுமோ என்ற பயம் ரஜினியை வாட்ட ஆரம்பித்துள்ளது.
தனது பட ரிலீசின்போது ரசிகர்கள் அமைதியாக இருந்துவிட்டால் படம் அந்தோஆகிவிட வாய்ப்புள்ளதாக ரஜினி தரப்பு கருதுகிறது.
இதனால் ரசிகர்களின் மனம் குளிரும்படி ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் ரஜினிஉள்ளார். பேசாமல் விஜய்காந்துக்குத் தான் எனது ஆதரவு என ரஜினி புதிய ரூட்டில்போகவும் ரஜினி திட்டம் போட்டார்.
ஆனால், விஜய்காந்தை ரஜினி ரசிகர்கள் ஜீரணிக்க மாட்டார்கள் என்ற பீட்-பேக்கிடைத்துள்ளதையடுத்து அத் திட்டத்தை கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்றால் அந்தக் கட்சியில் 234 தொகுதியில்போட்டியிடுவதற்குக் கூட உரிய ஆட்கள் இல்லை. சும்மா டம்மியாக தேர்தலில்நிற்கிறது. அப்படியே போயஸ் தோட்டத்தை நோக்கி தவமும் இருந்து வருகிறது.
இதனால் அந்தக் கட்சியை ரஜினி ஆதரிக்கச் சொன்னால் கூட ரசிகர்கள் அதைச்செய்யப் போவதில்லை.
பாமக இடம் பெற்றுள்ளதால் திமுக கூட்டணியையும் ஆதரிக்க முடியாத நிலையில்ரஜினி உள்ளார். இதனால் அவருக்கு இரண்டு ஆப்ஷன்கள் தான் உள்ளன.
ஒன்று கார்த்திக்கை ஆதரிப்பது அல்லது பேசாமல் அதிமுகவை ஆதரித்துவிடுவது.கார்த்திக் விஷயத்தில் ரசிகர்கள் இடையே ஆர்வம் இல்லை.
நல்லபடியாக தங்களை கவனிக்கும் அதிமுகவையே ரஜினி மன்ற நிர்வாகிகள்விரும்புகின்றனர்.
மேலும் பாமகவுக்கு பதிலடி கொடுக்க இதுதான் சரியான தருணம் என்றும் அவர்கள்கருதுகின்றனர்.
ரசிகர்களின் கோபம் நடிகர் ரஜினிகாந்த்தை உலுக்கி விட்டதாகத் தெரிகிறது. தன்னைமீறி ரசிகர்கள் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்த ரஜினி, சிவாஜி படப்பிடிப்பைவேகமாக முடித்துக் கொண்டசென்னை திரும்பியுள்ளார்.
சென்னையில் உள்ள தனது கல்யாண மண்டபத்தில் ரசிகர் மன்றத் தலைவர்சத்யநாராயணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனைநடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது தேர்தலில் யாருக்கு வாய்ஸ் கொடுக்கலாம், கை மீறிப்போய்க் கொண்டிருக்கும் ரசிகர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது குறித்துரஜினி தீவிரமாக விவாதித்தார்.
தனது அரசியல் குருவான மூத்த தமிழ் பத்திரிக்கையாளரிடமும் பேசினார். அதிமுகஅபிமானியான அவரும் ஜெயலலிதாவையே ஆதரிக்கச் சொன்னதாகத் தெரிகிறது.
இதையடுத்து ரஜினி இன்னும் இரண்டொரு நாளில் ஜெயலலிதாவை சந்திப்பார் என்றுதெரிகிறது.
ரஜினிக்கு நெருக்கமானவரும், தற்போது 3வது முறையாக அதிமுகவில்ஐக்கியமாகியுள்ளவருமான நடிகர் விஜயக்குமார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
விஜயக்குமாரும் ரஜினியை சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த்ஜெயலலிதாவை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications