சத்யபாமா: மாணவர்கள் மீது அடியாட்கள் தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள்மீது அடியாட்களைக் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் கடும் தாக்குதல் நடத்தியதாகமாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் உயிர் தப்பி சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றனர்.

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும்பொறியியல் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டது.

இதனால் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துபல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் அதிமுக எம்.பி. ஜேப்பியாருக்குச் சொந்தமான சத்யபாமாநிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 60 மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்துநீக்கப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில்குதித்தனர். வகுப்புப் புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை பல்கலைக்கழக பாதுகாவலர்கள், கண்மூடித்தனமாகத் தாக்கியதால்கோபமடைந்த மாணவர்கள் காவலர் ஓய்வறைக்கு தீ வைத்தனர். இதனால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந் நிலையில் இன்று காலை பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களைஅங்கிருந்து வெளியேறுமாறு கூறி 20க்கும் மேற்பட்டோர் கையில் தடிகளுடன் வந்துமிரட்டியுள்ளனர்.

இதைத் தட்டிக் கேட்ட மாணவர்களை அந்த ரவுடிகள் தாறுமாறாக அடித்துவிரட்டியுள்ளனர். இதனால் பீதியடைந்த மாணவர்கள் உயிர் தப்பி கிடைத்தபொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

ஆனால் விடாமல் துரத்திய குண்டாந்தடி நபர்கள், மாணவர்களை விரட்டி விரட்டிஅடித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தற்போது விடுதியில் ஒரு மாணவரும்இல்லை.

அனைவரும் உயிருக்குப் பயந்து வெளியேறி விட்டனர். சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றனர்.

அடியாட்களை வைத்து தங்களை பல்கலைக்கழக நிர்வாகம் தாக்கியதால்ஆத்திரமடைந்த சில மாணவர்கள் விடுதிக்குப் பின்புறம் உள்ள ஒரு அறைக்கு இன்றுதீ வைத்தனர்.

இதில் அந்த அறை எரிந்து நாசமானது. சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால் பல்கலைக்கழக வளாகத்திற்குமுன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+