எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சோனியா
டெல்லி:
தனது எம்பி பதவியையும் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ராஜினாமா செய்தார்.
எம்.பி, எம்.எல்.ஏ, பதவிகளை வகிக்கும் ஒருவர் அரசு ஊதியம் பெறும் பதவிகளில் இருக்கக் கூடாது என்றவிதிமுறையுள்ளது. இதன் அடிப்படையில் ஜெயா பச்சனின் எம்.பி பதவியை தேர்தல் கமிஷன் பறித்தது.நடிகர் அமிர்தாப் பச்சனின் மனைவியான ஜெயாபச்சன் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து சமாஜ்வாடிக் கட்சியின்சார்பில் ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு உத்தர பிரதேச மாநில திரைப்பட வளர்ச்சிக்கழகதலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்தப் பதவிப் பறிப்புக்கு காங்கிரஸே காரணமாக இருந்தது. அதுதான் ஜெயா பச்சன் விவகாரத்தையே கிளப்பி பதவிக்கு ஆப்பு வைத்தது.
இந் நிலையில் சோனியா காந்தி, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட 44 எம்பிக்கள் அரசு ஊதியம் பெறும்வேறு சில பதவிகளிலும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பட்டியல் வெளியிட்டார்.
இதனால் சோனியா, சாட்டர்ஜி உள்ளிட்டோர் சிக்கலில் ஆழ்ந்தனர். இதில் சோனியா காந்தி எம்பியாகவும், அரசுஊதியம் பெறும் தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.
இந்த விவரங்களை மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சுட்டிக் காட்டியதையடுத்து நேற்று மக்களவை திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இந்த எம்.பிகளின் பதவிகளை காப்பாற்ற மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டது.நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கும் போது அவசர சட்டம் கொண்டு வர முடியாது.
எனவே காலவரையின்றி நாடாளுமன்றத்தை நேற்று மத்திய அரசு ஒத்தி வைத்தது. கூட்டத் தொடர் மீண்டும்ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் அவரச சட்டத்தையும் மத்திய அரசுவெளியிடவுள்ளது.
மத்திய அரசின் இச் செயலுக்கு பா.ஜ.க கூட்டணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அக் கூட்டணியின்எம்.பி.,க்கள் 61 பேர் முன்னாள் பிரதமர் வாஜ்பாஜ் தலைமையில் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்துநாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்தி வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும் சோனியா காந்தி, சாட்டர்ஜி உள்ளிட்ட 44 எம்.பிக்களின் பதவிகளைக் காப்பாற்றும் வகையில் மத்தியஅரசு அமல்படுத்தும் அவசர சட்டத்துக்கும் அனுமதி தரக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் சோனியா காந்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கலாமிடம் பாஜக கோரியது.
இந் நிலையில் தனது எம்பி பதவியையும் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியையும் சோனியாகாந்தி இன்று ராஜினாமா செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications