அதிமுக கூட்டணிக்கு ரெடியாகும் கேப்டன்?
சென்னை - வேலூர்:
வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள்கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார்.
வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சிலநாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த்புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர்பேசினார்.
ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில்கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொதுமக்களில் யாரையும் காணவில்லை.
இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக்கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் அவர் என்ன பேசுகிறார் என்பதை விட அவர்பேசுவதை போட்டோ பிடிப்பதிலேயே பாதிப் பேர் தீவிர கவனம் செலுத்தினர்.
ஓச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்ட கேப்டன், தொடர்ந்து நெமிலி, அரக்கோணம்,சோளிங்கர், கலவை, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில்பிரசாரம் செய்தார்.
நிதிப் பிரச்சனையில் கேப்டன்:
இதற்கிடையே விஜய்காந்தின் கட்சி கடும் நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது. மதுரையில் மாநாட்டை சில கோடிகள் செலவில் நடத்திய இதுவரைதேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் சில கோடிகளை இழந்துவிட்டார்.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்தவர்களிடமும் மாவட்டச்செயலாளர்களிடமும் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டிக் கொள்ளுமாறு அவர்கூறியிருப்பதாகத் தெரிகிறது.
கட்சி ஆரம்பித்தது முதல் சில சொத்துக்களையும் விற்றுள்ளார் விஜய்காந்த். மேலும்சில சொத்துக்களையும் விலை பேசி வருவதாக செய்திகள் வருகின்றன.
சினிமா மூலம் இனியும் எந்த அளவுக்கு வருமானம் பார்க்க முடியும் என்பதுசந்தேகமாக உள்ள நிலையில், சொத்து-பணத்தை விற்க வேண்டுமா என்ற கேள்விவிஜய்காந்த் குடும்பத்தாரின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அதிமுக அழைக்கிறதே.. அங்கு போய்விடலாம் என்று விஜய்காந்துக்குஅவர்கள் அட்வைஸ் தந்து வருகின்றனர்.
இதற்கிடையே விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவை சசிகலா நேரிலேயே சந்தித்துப்பேசியதாகவும், அப்போது 15 முதல் 18 தொகுதிகள் வரை தர அதிமுக தயார் என்றுகூறியதாகவும் தெரிகிறது.
ஆனால், வைகோவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என கேப்டன்தரப்பு கூறியுள்ளது. ஆனால், 20 தொகுதிகள் வரை தந்தாலே அதிமுக கூட்டணிக்குப்போய்விடுவார் விஜய்காந்த் என்கிறார்கள்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய்காந்த் தரப்பு மறுத்தாலும்திரைமறைவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications