மதுரை பல்கலை வேலை வாய்ப்புதிருவிழா: 55 பேருக்கு வேலை!
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் 55பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான வேலை நியமன உத்தரவைபல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மருதமுத்து வழங்கினார்.

பல்கலைக்கழக மு.வ. அரங்கில் நடந்த வேலை வாய்ப்புத் திருவிழாவில் 2,000க்கும்மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் 55 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் உள்ளஆல்செக் டெக்னாலஜிஸ் என்ற பி.பி.ஓ. நிறுவனத்தில் இவர்கள்பணியமர்த்தப்படவுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களில் 28 பேர் பெண்கள், 27 பேர் ஆண்கள். ஆல்செக்நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவு அதிகாரி மற்றும் பரிவர்த்தனை கண்காணிப்புஅதிகாரிகளாக 55 பேரும் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இவர்களின் வருடாந்திர ஊதியம் ரூ 1.2 லட்சம்.
இவர்களுக்கான வேலை நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில்நடந்தது.

இதில் துணைவேந்தர் மருதமுத்து கலந்து கொண்டு 55 பேருக்கும் வேலை நியமனஉத்தரவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தொழில் ஆலோசனைப்பிரிவு டீன் பி.ஆர்.ஆத்தப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆத்தப்பன் கூறுகையில், வெற்றிகரமான நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. நல்லஊதியத்துடன், ரூ. 50,000 மருத்துவ காப்பீடு மற்றும் ரூ. 2 லட்சம் உயிர்க் காப்பீடுஆகியவையும் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம்வழங்குகிறது என்றார்.
இதேபோல பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 22 மாணவர்களை தேர்வு செய்துஅதில் 6 பேரை நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications