முகையூர் திமுக எம்எல்ஏ சுயேச்சையாக போட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முகையூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ளதற்போதைய திமுக எம்.எல்.ஏவான ஏ.ஜி.சம்பத் பாமக வேட்பாளரை எதிர்த்துசுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது முகையூர். இந்தத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்த சம்பத் உள்ளார்.அவருக்கே மீண்டும் சீட் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

திமுகவினரும், மீண்டும் நமக்கே தொகுதி கிடைக்கும் என ஆவலாக இருந்தனர்.

ஆனால் திமுகவினருக்குஅதிர்ச்சி அளிக்கும் வகையில் இத்தொகுதியை பாமகவுக்குதிமுக தலைமை ஒதுக்கியது. இதனால் சம்பத்தும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சிஅடைந்தனர். திமுகவினரும் அதிருப்தி அடைந்தனர்.

தலைமையின் முடிவை எதிர்த்து முகையூரில் சம்பத்தின் ஆதரவாளர்கள் போராட்டம்நடத்தினர். திமுக கொடிக் கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின்ஆகியோரது படங்கள் எரிக்கப்பட்டன.பாமகவுக்கு ஆதரவாக நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்றும் சம்பத் தரப்புபகிரங்கமாக அறிவித்தது.சம்பத் ஆதரவாளர்களின் செயலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம்தெரிவித்தார். திமுக கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டதை கண்டித்துஅறிககையும் விட்டார்.

இந் நிலையில் மீண்டும் தனக்கு தொகுதியை ஒதுக்காவிட்டால் சுயேச்சையாகப்போட்டியிட சம்பத் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.இதுகுறித்து அவர் கூறுகையில், பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதை இங்குள்ளதிமுகவினர் ஏற்கவில்லை, ஏற்கவும் மாட்டார்கள்.

என்னை சுயேச்சையாக நிற்குமாறு ஆயிரக்கணக்கானோர் தினமும் வற்புறுத்திவருகிறார்கள். அதுகுறித்து நானும் யோசித்து வருகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில்எனது முடிவை அறிவிப்பேன் என்றார் சம்பத்.

சம்பத்துக்கு முகையூரில் ஓரளவு செல்வாக்கு இருப்பதால் பாமக வேட்பாளருக்குபெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள்போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும்நேருக்கு நேர் மோதுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+