சந்தானத்துக்கு மதுரைக்கு பதில் சோழவந்தான்!
சென்னை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் சந்தானம் மதுரை மத்தியதொகுதிக்குப் பதிலாக சோழவந்தான் தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுகதலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மீண்டும் உசிலம்பட்டியையே எதிர்பார்த்த சந்தானத்துக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது.எப்படியோ கார்த்திக்கு கிடைக்காத சீட்டு நமக்காவது கிடைத்ததே என்று தன்னைசமாதானப்படுத்திக் கொண்டார்.
ஆனாலும் தனக்கு மதுரையைத் தவிர வேறு தொகுதி எதையாவது ஒதுக்குமாறும்,குறிப்பாக முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் கிராமப்புறமாக உள்ள தொகுதியைத்தருமாறும் சசிகலா மூலமாக ஜெயலலிதாவுக்கு சந்தானம் கோரிக்கை விடுத்ததாகத்தெரிகிறது.
இதைத் தொடர்ந்து சந்தானத்தின் தொகுதியை ஜெயலலிதா மாற்றியுள்ளார். அதன்படிகிராமப்புற தொகுதியான சோழவந்தான் சந்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவே போட்டியிடவுள்ளது.
இதேபோல மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பெண்ணாகரம்தொகுதி மாற்றப்பட்டு அக்கட்சிக்கு தளி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்ணாகரத்தில் அதிமுகவே போட்டியிடும் என ஜெயலலிதா விடுத்துள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications