திண்டிவனம், டிஆருக்கு பட்டை-செந்திலுக்கு ஆப்பு
சென்னை:
அதிமுகவில் சீட் கிடைக்கும் என கடைசி வரை நம்பிக்கையோடு காத்திருந்ததிண்டிவனம் ராமமூர்த்தி, விஜய டி.ராஜேந்திரருக்கு ஆகியோருக்கு முதல்வர்ஜெயலலிதா பட்டை நாமம் சாத்தியுள்ளார்.
காங்கிரசை உடைத்துக் (?) கொண்டு வருவதாகச் சொல்லி உதிரிப் பூ மாதிரி தனியாகவந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோதுஜெயலலிதாவை முதன்முதலில் சந்திக்கும் பாக்கியம் பெற்றவரும் இவரே.காங்கிரசில் தன்னுடன் பாதிபேர் இருப்பதாகவும் 42 சீட்கள் ஒதுக்க வேண்டும் எனவும்அதிமுக தேர்தல் குழுவிடம் பட்டியலை கொடுத்தார். பட்டியலை பார்த்தஅதிமுகவினர் காங்கிரசை உடைக்கச் சொன்னால், உதிர்ந்து போய் வந்துஇருக்கிறீர்கள். பட்டியலை கொடுங்கள், அப்புறம் பார்கலாம் என அனுப்பி விட்டனர்.
ஆனாலும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியபோது தனக்கும் முதல்வர் இடம்ஒதுக்குவார் என கடைசி வரை எதிர்பார்த்தார். அப்போதும் சீட் ஒதுக்காததால்,அதிமுகவின் 182 சீட்களில் ஏதாவது ஒன்று கிடைக்கும் என கடைசி வரைஎதிர்பார்த்தார். எதுவுமே நடக்கவில்லை.
அதேபோல் தான் விஜய டி.ராஜேந்தரும். அம்மா கேட்காமலே அவருக்கு ஆதரவுதருவதாக அறிவித்தார். பின்னர் 3 சீட் கேட்டு, வசனம் பேசி, ஓபி குழுவிடம்வாக்குவாதம் செய்து, இதனால் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்கிவிட்டுத் திரும்பினார்.
ஆனாலும் ஒரு சீட் கொடுக்காமல் விட்டுவிட மாட்டார்கள் என்று நம்பிகருணாநிதியைத் திட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால், அவரை அப்படியே தூக்கி போயஸ் தோட்டத்தின் நெடுங் கதவுக்கு அப்பால்போட்டுவிட்டார்கள். ஒரு சீட்டும் கிடைக்கவில்லை.
டி.ஆராவது ஜெயலலிதாவிடம் திட்டு வாங்கிவிட்டு வந்ததோடு வீட்டில் இருந்தபேனரை கிழித்து எறிந்து கோபத்தைக் காட்டிவிட்டு அமைதியாகிவிட்டார்.
ஆனால், திண்டிவனமோ கடைசி நிமிடம் வரை சீட் கிடைக்கும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்றே சொல்லிக் கொண்டிருந்தார் (இப்போது கேட்டாலும் அதைத்தான சொல்வார்).
அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்து கண்டிப்பாக சீட் கிடைக்கும் என பெரும்எதிர்பார்ப்பில் இருந்த பல நடிகர்களுக்கும் சீட் தரப்படவில்லை.
இதில் பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியிருப்பவர் காமெடி செந்தில் தான். இவர் கடலாடிதொகுதியில் சீட் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருந்தார்.
அதேபோல திக்கித் திணறி தமில் பேசும் முரளி, கலைக் குடும்பத்தை சேர்ந்தவிஜயக்குமார், வில்லன் ஆனந்தராஜ் ஆகியோருக்கும் சீட் கிடைக்கவில்லை.ஆனந்தராஜ் புதுவையில் தனக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.
அதே நேரத்தில் பாமகவிலிருந்து விலகி வந்த சிவகாசி வின்சென்ட்டுக்கு தாராபுரம்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரைப் போலவே அதிமுகவுக்கு ஆதரவாகசெயல்பட்டு வந்த பாமக எம்எல்ஏ முருகவேல்ராஜனுக்கு சீட் இல்லை.
இதே போல சீட் எதிர்பார்த்த குட்டி குட்டி கட்சிகளுக்கும் எந்த தொகுதியுமஒதுக்கப்படவில்லை. ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட ஜெயலலிதாவுக்கு பெரியஅளவில் ஜால்ரா போட்டு வந்தவர்களுக்கும் ஒரேயடியாக கதவைச் சாத்தி விட்டார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications