விஜய்காந்த்: கூட்டணி இல்லை..போலீசும் இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணிக்கு நான் வர மாட்டேன் என்று தெரிந்ததும் எனக்கு அளிக்கப்பட்டுவந்த போலீஸ் பாதுகாப்பை எடுத்து விட்டார்கள். ஆனால் நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று நடிகர் விஜயகாந்த் ஆவேசமாகரக் கூறியுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பிரசார பொதுக் கூட்டம் சென்னை மயிலைமாங்கொல்லையில் நடந்தது.

இக் கூட்டத்தில் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ராமு வசந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

நிறைவாக விஜயகாந்த் பேசினார். அவர் பேசுகையில்,

என்னை பொது மக்கள் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அன்போடு அழைக்கிறார்கள்.(பொது மக்களா அப்படி சொன்னாங்க?) அது சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால்மக்கள் அன்பை யாரும் தடுக்க முடியாது.

நான் கூட்டணி வைப்பேன் என்ற நம்பிக்கையில் எனக்கு ஆரம்பத்தில் போலீஸ்பாதுகாப்பு கொடுத்து வந்தார்கள். ஆனால் கூட்டணிக்கு வர மாட்டேன் என்றுதெரிந்தவுடன், போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டனர்.

ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.

எனக்கு மக்களும், எனது தொண்டர்களும்தான் பாதுகாப்பு.

விஜயகாந்த்தால் என்ன செய்து விட முடியும் என்று கேட்கிறார்கள். ஆனால் மக்கள்நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். (மக்கள் நினைத்ததை சாதிக்க நீங்க எதுக்கு?)

நான் தைரியமானவன். எனது தைரியத்திற்காக ஓட்டுப் போடுங்கள். உங்களதுவாழ்க்கை முறையையே மாற்றிக் காட்டுகிறேன். ஒரு தடவை வாய்ப்பு அளியுங்கள்.அதன் பிறகு விஜயகாந்த் சொன்னதைச் செய்வதைப் பாருங்கள் என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் பொதுக் கூட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்களும்,பொதுமக்களும் திரண்டிருந்தனர். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடியஅளவிலேயே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் விஜயகாந்த் கட்சியின் தொண்டர் படையினர் பாதுகாப்புப் பணியைதிறம்பட செய்திருந்ததால் எந்தவித சலசலப்பும் இன்றி கூட்டம் நடந்து முடிந்தது.

இதற்கிடையே விஜய்காந்துடன் கூட்டணி சேர பாஜக அதி தீவிரமாக முயன்றுவருகிறது.

சமீபத்தில் விஜய்காந்துடன் பேசிய பாஜக முன்னாள் தலைவர் வெங்கையாநாயுடுவின் ஆட்கள், நீங்கள் தனித்தே நில்லுங்கள். தேர்தல் செலவு குறித்து பயப்படவேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் பலத்தை நிரூபித்துவிட்டுபாஜகவுக்கு வாருங்கள் என்றனராம்.

ஆனால், விஜய்காந்த் பாஜகவுக்கு எப்போது வேண்டுமானாலும் வரட்டும். இப்போதுநாம் யாருடனாவது கூட்டணி வைத்தாக வேண்டும். அதிமுக, திமுகவில்வாய்ப்பில்லை. இதனால் விஜய்காந்த் தான் ஒரே வழி. அவருடன் எப்படியாவதுகூட்டணிக்குப் பேசுங்கள் என்று தங்கள் மத்தியத் தலைவர்களை பாஜக மாநிலத்தலைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இந்தத் தேர்தலிலேயே கூட்டணி குறித்து பரிசீலிக்குமாறு விஜய்காந்துக்குமீண்டும் பாஜக தரப்பில் இருந்து நெருக்குதல் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒத்தையாகப் போவதை விட ஊர்க்காரனுடன் சேர்ந்து போவதே நல்லது என்ற ஒரேகாரணத்திற்காக விஜயகாந்த் பின்னால் மீண்டும் சுற்ற ஆரம்பித்திருக்கிறது பாஜக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+