மே 13, 14ல் நுழைவுத் தேர்வு: அரசு அறிவிப்பு
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மே 13மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொழில் கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசுஅவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இதை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத் திட்டமுறையில் படிக்கும் மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், தமிழக அரசின் சட்டம் செல்லாது என்றும், நுழைவுத் தேர்வை நடத்தவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுமுறையில் நடக்குமா, எப்படி நடக்கும் என்று தெரியாமல் மாணவ, மாணவியர்பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந் நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின்பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்டூ படிப்பை படிக்காத மாணவ, மாணவியருககு தொழில்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து மாணவ, மாணவியர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் சட்டத்திற்குசென்னை உயர்நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்தநிலையில இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்பத்தில்மாணவர்கள் ஆழ்ந்த விடாமல் தடுக்க, வருகிற கல்வி ஆண்டுக்கு நுழைவுத் தேர்வுமூலம் மாணவர் சேர்க்கையை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மே 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.இந்தநுழைவத் தேர்வு தமிழக அரசு பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும், மத்தியஅரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசுஉத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications