நினைச்சோம்..நடக்கலையே..திண்டிவனம் விரக்தி!
சென்னை :
அதிமுக கூட்டணியில் எங்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால்அது நடக்கவில்லை, அதற்கு என்ன செய்வது என்று திண்டிவனம் ராமமூர்த்திவிரக்தியாகக் கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்திருந்தால் இந்நேரம் திண்டிவனம் தொகுதியாவது கிடைத்திருக்கும்.ஆனால், முதல்வர் ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக கட்சிக்குள் சூறாவளியைஏற்படுத்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் திண்டிவனம் ராமமூர்த்தி.வன்னியர்களைப் புறக்கணிக்கிறது காங்கிரஸ், திமுகவிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார் வாசன், கருணாநிதியின் அடிமைகளாக காங்கிரஸ் தலைவர்கள் மாறிவிட்டார்கள் என அதிமுக பேசச் சொன்னதை ரிபீட் செய்து வந்தார்.
தனக்கு அள்ளிக் கொடுப்பார்கள் என்று நம்பி ஓவராகப் போனார் திண்டிவனம்.ஆனால், ஜெயலலிதா இவருக்கு கிள்ளிக் கூட தரவில்லை.
அதிமுகவில் 182 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டநிலையில் இனிமேல் திண்டிவனத்திற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
இந் நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை திண்டிவனம் ராமமூர்த்திகூட்டியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவரிடம் கேட்டபோது,
என்ன செய்வது, கூட்டணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதுநடக்காமல் போய் விடடது. நாங்கள் என்ன செய்ய முடியும்?
சட்டசபைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்துசெயற்குழுவில் பேசிமுடிவு செய்வோம். அதன் பின்னர் எங்களது நிலை தெரிய
வரும் என்றார்.இது தேவையா?












Click it and Unblock the Notifications