சென்னையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர்டாண்டன், மற்றும் ஆணையர்கள் நவீன் சாவ்லா, கோபால்சாமி ஆகியோர் இன்றுசென்னையில் அதிகாரிகள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைநடத்துகின்றனர்.
மே 8ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தீவீரமாகநடந்து வருகின்றன.இந்த ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக அவ்வப்போது தேர்தல் ஆணையர்கள்தமிழகம் வந்து சென்றனர். தற்போது 3 ஆணையர்களும் ஒன்றாக வந்துள்ளனர்.
நேற்று புதுவையில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்கள் இன்று சென்னையில் ஆய்வுமேற்கொள்கின்றனர்.
காலை 11 மணிக்கு ராஜ்பவனில் உள்ள கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைநடத்துகின்றனர்.
தனித் தனியாக அவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் இன்று மாலைஅனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்ஆகியோருடன் தேர்தல் ஆணையர்கள் விரிவான ஆலோசனை நடத்துகின்றனர்.
பின்னர் நாளை காலை தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபிஉள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications