ஓகேனக்கல் அருவியில் மூழ்கி 5 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
ஓகேனக்கல் நீர் வீழ்ச்சியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள்உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பெங்களூர் தூபனஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஓகேனக்கல்அருவிக்கு சுற்றுலா வந்திருந்தனர். அனைவரும் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தபோது தனம் என்பவர் நீர்ச் சுழலில் சிக்கிக் கொண்டார்.உயிருக்குப் போராடிய அவரைக் காப்பாற்றுவதற்காக மங்கம்மாள் (27), ராஜேஸ்வரி(27), அவரது மகள் பப்லு (10), அமலா (17), சுமதி (15) ஆகியோர் முயன்றபோதுஅனைவரும் சுழலில் சிக்கிக் கொண்டனர்.
இதில் தனம் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற அனைவரும் பரிதாபமாக நீரில்மூழ்கி உயிரிழந்தனர்.
ஓகேனக்கல், பெண்ணாகரம் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்புப் படை வீரர்கள்விரைந்து வந்து உடல்களை மீட்டனர்.












Click it and Unblock the Notifications