தேர்தலை புறக்கணிக்கும் "சுனாமி விவசாயிகள்!
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் நிவாரணம்கிடைக்காமல் அவதிப்படும் விவசாய குடும்பங்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
கடலூர் மாவட்டம் தேவனாம்பேட்டை பகுதியில் மல்லிகை, வெங்காயம் அதிகஅளவில் பயிரிடப்படுகிறது.இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் இத்தொழிலை செய்துவருகின்றனர். இது மட்டுமில்லாமல் மீன் தொழில், பயிர்களும் அதிக அளவில் இங்குவிளைவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சுனாமி அலைத் தாக்குதலில் மல்லிகை, வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள்கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
பிள்ளையார் கோவில் தெரு, கபிலன் தெரு, முத்தாளம்மன் தெரு, புஷ்ப வன்னியதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலங்கள் சுனாமியால் பாழ்பட்டு விட்டன.
இனிமேல் அந்த நிலங்களில் பயிர்கள் எதுவும் சாகுபடி செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலுக்குப் பிறகு இப்பகுதியில் மல்லிகை உற்பத்திவெகுவாக குறைந்து விட்டது.
சுனாமிக்கு முன்பு தினசரி 20 கிலோ மல்லிகைப் பூ ஏற்றுமதி செய்யப்படுமாம்.ஆனால் தற்போது வெறும் 500 கிராம் பூ மட்டுமே கிடைக்கிறதாம்.
சுனாமி அலைகளின் கோரத் தாக்குதலால் கடல் நீர் நிலங்களுக்குள் புகுந்து மண்ணின்உப்புத் தன்மையை பன்மடங்கு அதிகப்படுத்தி விட்டதால் தற்போது நிலத்தில் பயிரிடமுடியவில்லை என விவசாயிகள் வருத்தப்படுகிறார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், மக்களுக்கும் அரசும், தனியார் தொண்டுநிறுவனங்களும் கோடிக் கணக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டன.
ஆனால் எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே எங்களது அதிருப்தியைவெளிப்படுத்தும் வகையில், வருகிற சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்கிறோம் எனஇப்பகுதி விவசாயக் குடும்பங்கள் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications