உதயசூரியனில் மொஹைதீன் வென்றது செல்லும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தலைவர் காதர் மொஹைதீன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன்முஸ்லீம் லீக் கடசிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இத் தொகுதியில்உதயசூரியன் சின்னத்தின் காதர் மொஹைதீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை எதிர்த்து திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்இக்பால் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக இருக்கும் காதர் மொஹைதீன்,உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அவர்மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி விட்டார். அவரது தேர்வை செல்லாது என்றுஅறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு காதர் மொஹைதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்தியயூனியன் முஸ்லீம் லீக் ஒரு கட்சி அல்ல. அது அங்கீகரிக்கப்படாத சமூக அமைப்புதான் என்று தெரிவித்திருந்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சொக்கலிங்கம், காதர் மொஹைதீன்எம்.பி. தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+